நேர்முகம் காணலாம்

நேர்முகத்துக்கு அழைப்பு வரும்போதே முடிந்தவரை உங்களுக்கு அனுகூலமான நேரத்தை சொல்லிவிடுங்கள். பின்னர் அதனை மாற்றுவது நல்லதல்ல.

சில நிறுவனங்கள் அழைப்பினை அலைபேசியில் உறுதிசெய்த பின்னர் மின்னஞ்சல் அனுப்புவார்கள் அதற்கு மறக்காமல் பதிலளித்து விடவும்.

நேர்முகத்துக்கு செல்லமுடியாத சூழல் ஏற்பட்டால் முன்னரே தெரியபடுத்தவும் இன்று நோ  ஷோ பொதுவான பிரச்சனையாக அவதரித்துள்ளது.

குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகவே சென்றுவிடுங்கள் 15 நிமிடத்திற்கு முன்பாக சென்றால் நலம்.

முடிந்தவரை எந்த இடம் என்கிற தெளிவு முக்கியம் இது வீணான அலைச்சலையும் நேரவிரயத்தையும் தவிர்க்கும். முடிந்தால் அதற்கு முந்தையதினம் அந்த பகுதிக்கு சென்று தெளிவுபெற்றால் நலம்.

நேர்முகத்தில் நீங்கள் நன்றாக செவிசாய்ப்பவராக இருப்பது முக்கியம் கேள்விகளை உள்வாங்கி பதில் அளிக்கவும். புரியவில்லை என்றால் தெளிவுபெற்று விளக்கம் சொல்லவுமமுந்தைய தினம் சற்று முன்னரே தூங்கி விழியுங்கள், தெளிவான மனநிலைக்கு இது மிகவும் உதவிடும்.

முந்தைய தினம் சற்று முன்னரே தூங்கி விழியுங்கள், தெளிவான மனநிலைக்கு இது மிகவும் உதவிடும்.

முன்கூட்டியே அந்த நிறுவனத்தை பற்றிய தகவல்கள் மற்றும் உங்களை நேர்முகம் கண்டிடும் அதிகாரியின் பின்புலம் தெரிந்தால் சில நேரங்களில் அவை  பேச்சின் போக்கை மாற்றிட உதவிடலாம்

CV ஒன்றுக்கு இரண்டாக எடுத்து சென்றால் நலம், சில நேரங்களில் நேர்முகம் காண்பவர் கணினியிலோ அல்லது வேறு எங்கும் மறந்து வைத்திருக்கலாம் உங்களிடம் உள்ள ஒன்றை அந்த நேரத்தில் கொடுப்பது அவர்களின் மனதில் உங்களை பற்றிய அபிப்ராயத்தை மாற்றிடும்.

உங்களுக்கு அந்த நேரத்தில் தேநீர் ஏதும் வேண்டுமா என்று கேட்டால் தயக்கமில்லாமல் சொல்லுங்கள். இவை உங்களை ஆசுவாசப்படுத்த உதவிடும்.

பல பெரிய நிறுவனங்களில் கூட குறிப்பிட்ட நேரத்தில் நேர்முகம் ஆரம்பம் செய்யாமல் இருக்க வாய்ப்புண்டு. சற்று பொறுமை காத்திடுங்கள், அங்கிருக்கும் செய்திதாள்கள் படிக்கலாம் அதுவரை.

சில நேரங்களில் முதல் நேர்முகம் முடிந்து அடுத்த நேர்முகம் வேறொரு அதிகாரியுடன் நடந்திடும் வாய்ப்புகள் அன்றே இருக்கலாம். இச்சூழலில் அன்றே இருந்து அதையும் முடித்து செல்லுங்கள் இல்லையெனில் இதற்கு ஒரு வாரம் ஆகிடும் ஒரு வாரம் என்பது 7- 10 தினங்கள் பெரும்பாலும்.

முன்னர் பணிபுரிந்த / பணியில் இருக்கும் இடத்தை பற்றிய எந்தவித தவறான கருத்தையும் பகிர்ந்திட வேண்டாம்.

முக்கியமாக முந்தைய தினம் மதுவை தவிர்க்கவும் உங்களின் திறனை இது பெருமளவில் பாதிக்கலாம். சோகமும் இதனால் தொடரும். (டிஸ்கி: இது அருந்துபவர்களுக்கு மட்டும் மற்றவர்கள் கடந்து செல்லவும்).

சம்பள போக்குவரத்துகளை அன்றே ஒப்புக்கொள்ள வேண்டும் என்று எந்த கட்டாயமும் கிடையாது யோசித்து பின்னர் தெரிவிக்கலாம்.

நேர்முகம் முடிந்தபிறகு அவர்களின் மின்னஞ்சல் இருந்தால் மறக்காமல் அன்றைய உபசரிப்பிற்கு நன்றி சொல்லி ஓர் மின்னஞ்சல் அனுப்புங்கள்.

எண்ணமும் எழுத்தும்

திரு ஷேக் முஹம்மது சுலைமான்.

துபாய்

(Visited 37 times, 1 visits today)
3+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *