புதிய கேபிள் டிவி கட்டணத்திற்கு பிப்ரவரி 18 வரை தடை விதித்த கொல்கத்தா நீதிமன்றம்

டிராய், கேபிள் மற்றும் டிடிஎச் சேவை குறித்து அண்மையில் புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதன்வாடிக்கையாளர்கள்  அடிப்படை கட்டணமாக 155 ரூபாயைச் செலுத்தி 100சேனல்களைப் பெறலாம் என்றும், அதற்கு மேல் கட்டணச் சேனல்களை மக்களே தேர்வு செய்து அதற்குரிய கட்டணத்தை செலுத்தலாம் எனவும் அறிவித்துள்ளது.

இந்த விதிமுறைகள் பிப்.1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. டிராயின் இந்த புதிய விதிமுறைக்கு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த புதிய முறையால் கேபிள் டிவி கட்டணம் 200 ரூபாய்க்கு மேல் வசூலிக்க வேண்டி வரும் என்பதால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்படுவதுடன் கேபிள் ஆபரேட்டர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாவார்கள் என்றும் பெரு நிறுவனங்களுக்கு சாதகமாக டிராய் செயல்படுகிறது என்று கூறி கேபிள் ஆபரேட்டர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

இந்த புதிய கேபிள் டிவி கட்டண திட்டத்தை எதிர்த்து 80 கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில், புதிய திட்டத்தால் கேபிள் டிவி ஆப்பரேட்டர்களின் வருமானம் பெருமளவு பாதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. தேவைப்படும் சேனல்களின் பட்டியலை தர வாடிக்கையாளர்கள் விருப்பம் தெரிவிக்காததால் புதிய கட்டண திட்டத்திற்கு அவர்களை மாற்றுவது உடனடியாக சாத்தியமில்லை என்றும் வாதிடப்பட்டது.

இந்த வாதங்களை கேட்ட நீதிமன்றம், கட்டண உயர்வு திட்டத்திற்கு பிப்ரவரி 18ம் தேதி வரை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், பிப்ரவரி 14 ம் தேதிக்குள், இதுகுறித்து டிராய் பதிலளிக்க வேண்டும் என்றும் கொல்கத்தா உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

(Visited 18 times, 1 visits today)
1+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *