தமிழ்நாடு, ஆந்திராவில் பிறப்பின் போது கடுமையாக குறைந்து வரும் ஆண் பெண் விகிதாச்சாரம்

2007 -2016 க்கு இடைப்பட்ட காலத்தில்  பெரிய மாநிலங்களுக்கான ஆண்-பெண் குழந்தைகளுக்கான பிறப்பு விகிதத்தின் ஆய்வு முடிவுகள்  தென் மாநிலங்கள் மோசமான நிலையை நோக்கி நகர்கிறது என்ற  அதிர்ச்சி செய்தியைத் தருகிறது.

ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய இரு மாநிலங்களும் 2007 -2016 குட்பட்ட காலக்கட்டத்தில் பிறப்பின் போது 1000 ஆண் குழந்தைகளுக்கு 806 பெண் குழந்தைகள்  என்ற குறைந்த விகிதாச்சாரத்தில் உள்ளது. இதே காலக்கட்டத்தில் இந்தியாவின் சராசரி ஆண்-பெண் குழந்தை பிறப்பு விகிதம் 1000 ஆண்களுக்கு 877 பெண்கள் என்ற அளவில் உள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் தான் இதே காலக்கட்டத்தில் பெண்கள்  980 என்ற அதிக விகிதத்திலும், கேரளாவில்  954 என்ற அளவிலும் உள்ளது. முன்பு குழந்தை பிறப்பின் போது மிகக்குறைவாக இருந்த பெண் குழந்தை பிறப்பு தற்போது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் 848 லிருந்து   902 என்ற அளவிலும், அஸ்ஸாமில்   834 என்ற பெண் குழந்தை என்ற எண்ணிக்கையிலிருந்து  888 ஆகவும் உயர்ந்துள்ளது.

தமிழ்நாடு மாநிலத்தைப் பொறுத்தவரையில், 2006 ல்  1000 ஆண்குழந்தைகளுக்கு 939 பெண் குழந்தைகள் என்ற விகிதத்தில் இருந்தது. ஆனால் 2017ல், இந்த பிறப்பு விகிதம் 840 என்ற விகிதத்தில்  குறைந்துள்ளது. அதிலும் குறிப்பாக 2015 ல் குழந்தை பிறப்பில் ஆண் பெண் விகிதம் 815 என்ற விகிதத்தில் மிகக் குறைவாகா இருந்துள்ளது. 2011ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டில் ஆண் பெண் குழந்தை பிறப்பு விகிதம் இந்திய சராசரியைக் காட்டிலும் குறைந்துள்ளது. கர்நாடகா 1004 (2007) என்ற விகிதத்திலிருந்து  896 (2016) என்று குறைந்துள்ளது. உத்தரகாண்ட் 869 (2006) லிருந்து 825 (2017) ல் குறைந்துள்ளது.

தென் மாநிலங்களில் 2007 க்கும் 2016 க்கும் இடைப்பட்ட காலத்தில் ஆண் பெண் விகிதம் பெருமளவு குறைந்து வருவது கவலை தரும் விஷயம்.

இதே காலக்கட்டத்தில், மேற்கு வங்காளம், ஒடிஸா, ஜம்மு காஷ்மீர் , கோவா போன்ற மாநிலங்களில் பிறப்பின் போது ஆண் பெண் குழந்தை விகிதம் குறைந்து வருகிறது.பீகாரில் 924 லிருந்து 837 என்ற எண்ணிக்கையிலும், உத்திரப் பிரதேசத்தில்  930 பெண் குழந்தைகள் என்ற எண்ணிக்கையிலிருந்து  885 என்ற அளவிலும் குறைந்துள்ளது. குஜராத்திலும் 905 என்ற எண்ணிக்கை  886 (2014) ல் குறைந்துள்ளது.

 

 

(Visited 59 times, 1 visits today)
2+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *