தமிழகத்தில் ஆண் வாக்காளர்களைக் காட்டிலும் பெண் வாக்காளர்களே எண்ணிக்கையில் அதிகம்

சென்னை: தமிழகத்தில் 2019 லோக்சபா தேர்தலில் ஆண் வாக்காளர்களைக் காட்டிலும் பெண் வாக்காளர்களே அதிகம் என்று தேர்தல் ஆணையம் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் கேரளா, அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மேகாலாயா, மிசோரம் மற்றும் புதுச்சேரி போன்ற மாநிலங்களில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அந்த வகையில், 2019 ல் தமிழகமும் பெண் வாக்காளர்கள் அதிகமுள்ள  மாநிலங்களின் பட்டியலில் இணைந்துள்ளது.

தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் 5.91 கோடி. இதில் ஆண்கள் 2.92 கோடி. பெண்கள் 2.98 கோடி. திருநங்கை வாக்காளர்கள் 5,472 பேர்.  கடந்த தேர்தலில் 8.5% வளர்ச்சி அடைந்த பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை , இந்த ஆண்டு 11% அளவிற்கு உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிராவும் கடந்த தேர்தலைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு 13 லட்சம் பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. மகாராஷ்டிரா மொத்த வாக்காளர்கள் 8.73 கோடி பேர். ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை  4.57 கோடி. பெண் வாக்காளர்கள்   4.16 கோடி பேர். கடந்த லோக்சபா தேர்தலில் (2014) , 1000ஆண்களுக்கு  915 பெண் வாக்காளர்கள் என்ற நிலையிலிருந்து தற்போது 911 என்ற விகிதத்தில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை கூடி உள்ளது.

(Visited 21 times, 1 visits today)
0

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *