66% மாணவர்களை அரசுப் பள்ளிகளில் இருந்து வெளியேற்றிய டெல்லி அரசு பள்ளிக்கூடங்கள்

புதுடெல்லி: 2017-18 ஆம் ஆண்டில் டெல்லியில்  9, 10 ம் வகுப்புகளில் பயிலும்   அரசுப்பள்ளி மாணவர்களில் தேர்ச்சி பெறாதவர்களில்  66% பேரை மீண்டும் பள்ளியில் படிப்பைத் தொடர இயலாமல் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

டெல்லியில் தேர்ச்சி பெறாத 1,53,446 மாணவர்களில் 52,582 பேரை மட்டுமே அதே வகுப்புகளில் மீண்டும் சேர்ந்து படிக்க அனுமதி அளித்துள்ளது டெல்லி அரசுப் பள்ளிக்கூடங்கள். குறிப்பாக இதில் 9, 10 வகுப்பு மாணவர்களே அதிக எண்ணிக்கையில் அடங்குவர்.

9,10 ம் வகுப்புகளில் 42,503 பேர் (2017-18) ல் தேர்ச்சி பெறவில்லை. இவர்களில் 3812 பேருக்கு மட்டுமே மறு சேர்க்கை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 91% மாணவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அரசுப்பள்ளிகளில் எக்காரணம் கொண்டும் தேர்ச்சி பெறாத மாணவர்களை வெளியே அனுப்பக்கூடாது என்றும், மறு சேர்க்கைக்கு மாணவர்கள் விரும்பும் பட்சத்தில் அவர்களைக் கட்டாயமாகச் சேர்க்க வேண்டும் என்ற சட்டம் அமலில் உள்ளது.

அவ்வாறு இருந்தும் அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்தைக் கூட்டவே இது போன்ற மோசமான செயல்களில் டெல்லி அரசுப்பள்ளிக்கூடங்கள் செயல்பட்டுள்ளன.

(Visited 5 times, 1 visits today)
1+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *