2004 -2007 ஆம் ஆண்டுகளில் மத்திய தொலைபேசி மற்றும் தகவல் தொடர்பு அமைச்சராக இருந்தவர் திமுகவின் தயாநிதி மாறன்.இந்த காலகட்டத்தில் சென்னையில் உள்ள தனது வீட்டிற்கு சட்ட விரோதமாக அரசு துறை நிறுவனமாக, பிஸ்என்எல் தொலைபேசி நிறுவனத்தின் இணைப்புகளை கொடுத்து அதன் மூலம் தனது சகோதரரின் சண்டை டிவி தொலைக்காட்சியின் நேரடி ஒளிபரப்புக்கு உதவியாக இருந்தார் என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இது தொடர்பாக 2016 ஆம் ஆண்டில் இருந்தே சிபிஐ வழக்கு விசாரணை செய்து வருகிறது. சென்ற ஆண்டு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என்று வழக்கில் இருந்து அனைவரையும் விடுவித்தது.
மீண்டும் சிபிஐ, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய, உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்கு மீண்டும் புதிதாக பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு வந்தது.
இந்நிலையில் நேற்று இவ்வழக்கில் நேற்று மாறன் சகோதரர்கள் மற்றும் சண் டிவி ஊழியர்கள் , பிஸ்என்எல் ஊழியர்கள் மீது மீண்டும் புதிதாக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பல ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வருளவ இந்த திருட்டு வழக்கில் போதிய ஆதாரங்கள் இருந்தும் இதுவரை மாறன் சகோதரர்கள் தப்பித்து வருவதாக பொது மக்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது