நகர்ப்புற நக்சல்கள் வரிசையில் இன்று ஆனந்த் டெல்டும்டே கைது

மும்பை : “எல்கர் பரிசத்” வழக்கில் மாவோயிஸ்ட்களுடன் தொடர்பிருப்பதாகக் கூறி   ஆனந்த் டெல்டும்டேவை மும்பை போலீஸார் இன்று கைது செய்தனர்.

புனேயில் உள்ள ஷானிவார்வாடா பகுதியில் எல்கர் பரிசத் மாநாடு கடந்த ஆண்டு நடந்தது. மாவோயிஸ்ட்டுகள் ஆதரவு தெரிவித்த அந்த மாநாட்டில் பங்கேற்ற சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் கலந்து கொண்டு  சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசி இருந்தனர். நகர்ப்புற நக்சல்கள் என்று காவலர்கள் அடையாளப்படுத்தப்படும் இவர்களால்தான்  மறுநாள் பீமாகோரிகான் பகுதியில் கலவரம் நடந்தது என்று போலீஸார் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த பீமாகோரிகான் கலவரம் வழக்கு தொடர்பாக ஏற்கனவே அருண் பெரேரியா, வெர்னன் கோன்சல்வேஸ், சுதா பரத்வாஜ், வி.வரவரா ராவ், கவுதம் நவ்லகா ஆகியோர் வழக்கை எதிர்கொண்டு வருகின்றனர். சமூக ஆர்வலர்கள் என்ற போர்வையில் ஜனநாயக விரோதக் கருத்துக்களை ஆட்சிக்கு எதிரான பேச்சு என்ற போர்வையில் தேசத்தைத் துண்டாட பல விதமான சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பகிர்ந்து வருவது வழக்கமாகி உள்ளது. இதற்கு பல பத்திரிகைகள் ஆதரவுக் கரம் நீட்டி வருவதும் வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது.

இந்நிலையில், எல்கர் பரிசத் வழக்கில் மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பு இருப்பதாக எழுத்தாளர் ஆனந்த் டெல்டும்டே மீது புனே போலீஸார் கருதியதன் அடிப்படையில் கைது செய்தனர்.

கோவாவில் உள்ள கோவா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெட்டில் பேராசிரியராக ஆனந்த் டெல்டும்டே பணியாற்றி வருகிறார். மாவோயிஸ்ட்டுகளுடன் தொடர்பிருப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாகக் கூறி இன்று அதிகாலை டெல்டும்டேவைக் கைது செய்தனர்.

புனே நகர போலீஸ் இணை ஆணையர் சிவாஜி போக்தே இதுக பற்றி கூறுகையில், ” மும்பை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட டெல்டும்டே, புனே போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பிற்பகலில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் ” எனத் தெரிவித்தார்.

எல்கர் பரிசத் வழக்கை விசாரித்து வரும் துணை போலீஸ் ஆணையர் சிவாஜி பவார் கூறுகையில் “புனே நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி டெல்டும்டே தாக்கல் செய்திருந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதனால் அவரைக் கைது செய்தோம்” எனத் தெரிவித்தார்.

எல்கர் பரிசத் வழக்கில் மாவோயிஸ்ட்டுகளுடன் டெல்டும்டேவுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்களை புனே போலீஸார் நீதிபதியிடம் அளித்துள்ளனர். இதையடுத்து, டெல்டும்டேவின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

(Visited 24 times, 1 visits today)
3+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *