திறந்து கிடக்கும் தேசம்

 

 

 

சிவ. சரவணக்குமார்.

இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக உடுமலை கவுசல்யா மத்திய அரசுப் பணியிலிருந்து சஸ்பெண்ட்செய்யப்பட்டுள்ளார்…சில வாரங்களுக்கு முன் பி.பி.சி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கௌசல்யா இந்திய நாட்டைப்பற்றி கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்களையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது…

இப்போது எடுக்கப்ப‌ட்ட நடவடிக்கை இருக்கட்டும்….முதலில் இவர் எந்த அடிப்படையில் பாதுகாப்புத்துறையில் பணியமர்த்தப்பட்டார்? இதற்கென இருக்கும் தேர்வுகளை எழுதி வெற்றி பெற்றாரா? இல்லை ஆணவப்படுகொலைக்கு ஆளானவரின் மனைவி என்ற தகுதியில் இந்த வேலை வழங்கப்பட்டதா? பாதுகாப்புத்துறையில் வேலை கிடைப்பது அவ்வளவு சுலபமா? குறைந்த பட்ச தகுதி , வேலைக்கு அமர்த்தப்பட இருப்பவரின் பின்னணி குறித்த விசாரணை , இப்படி எதுவுமே கிடையாதா?

சங்கர் கொலை செய்யப்படதிலிருந்தே  இந்தப்பெண் தியாகு , கொளத்தூர் மணி , கு.ராமகிருட்டிணன் போன்ற தமிழ் தேசியவாதிகளின் பிடியில் சென்று விட்டார்…மேலே சொன்ன தமிழ் தேசியவாதிகள் இந்தியா என்ற தேசத்தையே ஏற்காதவர்கள்…தமிழகத்தை இந்தியா ஆக்கிரமித்துள்ளது…இந்தியாவின் ஆதிக்கத்திலிருந்து தமிழகம் விடுதலைபெறவேண்டும் என்று வெளிப்படையாக எழுதியும் , பேசியும் வருபவர்கள்…நக்சலைட்டுகள் , இலங்கை பயங்கரவாத இயக்கங்கள் , வஹாபிய பயங்கரவாதிகள் ..இப்படி இந்திய தேசியத்துக்கு எதிராக செயல்படும் ஆயுதமேந்திய குழுக்களுடன் இணைந்துசெயல்படக்கூட இவர்கள் தயங்கியதில்லை…இதுவிஷயமாக இவர்கள் மீது பல வழக்குகள் உள்ளன…அதிலும் இந்த கு.ராமகிருட்டிணன் 2011ம் ஆண்டு இந்திய ராணுவ வாகனங்களை தாக்கிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்…ராணுவ வாகனங்களை தாக்கியவரின் பராமரிப்பில் இருப்பவருக்கு பாதுகாப்புத்துறையில் வேலை..பலே…! இதுவன்றோ தேசப்பாதுகாப்பு!

இப்போது மட்டுமல்ல…முப்பது வருடங்களுக்கு முன்பாகவே இப்படித்தான்… பிற மாநில நிலவரம் எப்படியோ தெரியாது…ஆனால் தமிழகத்தைப்பொறுத்தவரை , பாதுகாப்புத்துறையில் கருப்பு ஆடுகள் கலந்திருப்பது சகஜமாகவே இருந்து வருகிறது… நான் அமராவதி நகர் சைனிக் பள்ளியில் 1985 – 1990 வரை படித்தவன்…இந்தப்பள்ளி மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தால் நடந்தப்படுவது…பள்ளியின் பிரின்சிபல் , தலைமை ஆசிரியர் , கணக்காளர் அனைவருமே இராணுவ அதிகாரிகள்தான்…பள்ளியை மேற்பார்வையிட அவ்வப்போது இராணுவ உயர் அதிகாரிகள் வந்துகொண்டே இருப்பர்கள்..அப்போது பள்ளியில் சோமசுந்தரம் என்பவர் வரலாற்று ஆசிரியராக பணிபுரிந்தார்…அவர் தீவிர திராவிட கழக அபிமானி…ஈ.வெ.ரா படம் போட்ட திராவிடர் கழக கைப்பை ஒன்றை தூக்கிக்கொண்டே திரிவார்..இந்திய அமைதிப்படை இலங்கை சென்ற நேரம் அது…பள்ளியில் ஆண்டுதோறும் யூத் பார்லிமெண்ட் நடக்கும்… பாராளுமன்றத்தைப்போலவே ஏற்பாடு செய்யப்பட்டு மாணவர்களே  பிரதமர் , அமைச்சர்கள் , எதிர்க்கட்சியினர் போன்று வேடமேற்று நடிப்பார்கள்…திரு. சோமசுந்தரம் அந்த நிகழ்ச்சியில்  தெலுங்கு தேச எம்.பி ஒருவர் இந்திய அமைதிப்படையை மிக கடுமையாக விமர்சிப்பதுபோல காட்சியமைத்திருந்தார் [ Is it a peace keeping force or peace killing force? ] …எந்த தெலுங்குதேச எம்.பி இப்படிப்பேசினார்? இராணுவ அமைச்சகம் நட‌த்தும் பள்ளியில் , இராணுவ அதிகாரிகள்  முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  , ஒரு தி.க காரரால் இந்திய ராணுவத்தை இழிவு படுத்தி நிகழ்ச்சி நடத்த முடிந்தது…அவர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை… அவர் பணிக்காலம் முடிந்தே ஓய்வு பெற்றார்… இந்த நிகழ்ச்சி நடந்தபோது அவர் ஓய்வு பெறும் நிலையில் இருந்தார்…அதாவது குறைந்தப‌ட்சம் இருபத்தைந்து  வருடங்கள் அங்கு பணியாற்றியிருப்பார்… இந்தியா என்ற தேசத்தையே ஏற்காத ஒருவர் , இந்திய அரசின் , அதுவும் பாதுகாப்புத்துறையில் தன் முழு பதவிக்கால‌மும் பணியாற்றி ஓய்வு பெறுகிறார்…எப்படி இருக்கிறது பாருங்கள்…

ஒரு பாஸ்போர்ட்டுக்கு  விண்ணப்பித்தால் கூட போலீஸ் விசாரணை தேவைப்படும் இந்த நாட்டில் பாதுகாப்புத்துறையில் வேலைக்குச்சேர எந்த விசாரணையும் கிடையாது… இவர்யார்…பின்னணி என்ன…நாட்டுப்பற்று உள்ளவரா…தேசத்துக்கு எதிரான கொள்கை உடையவரா …இப்படி எந்த கேள்வியும் கிடையாது…எண்ணை மண்டியில் கணக்கு எழுதும் வேலைக்கு சேர்ந்தால் கூட அக்கம்பக்கம் விசாரிக்காமல் வேலை கொடுக்க மாட்டார்கள்… தேசப்பாதுகாப்பு தொடர்பான வேலை தேச விரோதிகளுக்கு எந்த சிரமமும் இல்லாமல் கிடைக்கிறது…கொ. ம.க தலைவர் திரு . ஈஸ்வரன் அவர்களைத்தவிர இந்த அநியாயத்தைப்பற்றி எவரும் மூச்சுக்கூட விடவில்லை…

இனி என்ன நடக்கும்? நிர்வாக நடைமுறைகள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் நீதிமன்றங்கள் தடை விதிக்கலாம்… பாஜக தலைவர் தமிழிசைக்கு எதிராக விமானத்தில் அநாகரீகமாக நடந்துகொண்ட பெண்ணுக்கு ஆதரவாக 16 வக்கீல்கள் ஆஜரான மாநிலம் இது…கௌசல்யாவுக்கு ஆதரவாக  வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபடலாம்…அரசியல் அழுத்தங்கள் காரணமாக துறைரீதியான விசாரணை கண்துடைப்புக்காக நடத்தப்பட்டு கௌசல்யா மீண்டும் அதே வேலையில் சேரலாம்…

அதுதான் தேசம் திறந்து கிடக்கின்றதே?

(Visited 519 times, 1 visits today)
33+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *