ஐந்தாவது ஒருநாள் போட்டி; இந்தியா 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
நியுசிலாந்தில் நடைபெற்றுவரும் ஒருநாள் போட்டியின் கடைசிப் போட்டி இன்று நடக்கிறது. ஐந்தாவது ஒருநாள் போட்டி இன்றுநடந்தது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலாவது பேட்டிங்கைத் தேர்வு செய்து ஆடியது. ரோஹித் சர்மா, தவான், சுப்மன் கில் முறையே 2,6,7 ரன்களில் ஆட்டமிழந்தனர். அம்பத்தி ராயுடு 90 ரன்களைக் குவித்தார். விஜய் ஷங்கர், ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா மூவரும் முறையே 45,34,45 ரன்களை எடுத்தனர். இந்தியா நாக்கு விக்கெட்டுகளை இழந்து தவித்துக் கொண்டிருந்த பொது அம்பத்தி ராயுடு மற்றும் விஜய் ஷங்கர் இருவரும் இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். இறுதியா இந்தியா 252 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
நியுசிலாந்து அணியில் அதிக பட்சமாக நீசம் 44 ரன்களை எடுத்தார். வில்லியம்சன் , லாதம் இருவரும் முறையே 39, 37 ரன்களை எடுத்தனர். இந்திய அணியில் சாகல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சமி, ஹர்திக் பாண்ட்யா இருவரும் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
இரண்டாவது இன்னிங்சை ஆடிய நியுசிலாந்து 217 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலமாக இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றது.