பத்ரி சேஷாத்ரி நெகட்டிவ் மதிப்பெண் ஏன் வேண்டும் என்று தெளிவாக விளக்கம்; நெகட்டிவ் மதிப்பெண் கூடாது – சென்னை உயர்நீதிமன்றம்

போட்டித் தேர்வுகளில் தவறான பதில்களுக்கு மதிப்பெண்களை குறைக்கும் நெகடிவ் மார்க் முறையை முழுமையாக அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐஐடி நுழைவு தேர்வில்,  தேர்ச்சிபெறாத நெல்சன் என்ற மாணவர், மறு மதிப்பீடு செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் 2013 ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். அதில், பிரதான தேர்வில் 50 மதிப்பெண் எடுக்க வேண்டிய நிலையில், 47 மதிப்பெண் மட்டுமே எடுத்ததால், அட்வான்ஸ் தேர்வு எனப்படும் அடுத்த கட்ட தேர்வுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் தனது விடைத்தாளை மறு மதிப்பீடு செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கை அப்போது விசாரித்த நீதிபதி சசிதரன், மாணவன் நெல்சனை அட்வான்ஸ் தேர்வுக்கு அனுமதிக்கவும், விடைத்தாளை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார். இந்நிலையில், பல வருடங்களாக நடந்துவரும் இந்த வழக்கு, நீதிபதி மகாதேவன் முன் தற்போது விசாரணைக்கு வந்தது. அப்போது, கல்வியில் முன்னேறிய நாடுகளில் கூட நெகடிவ் மார்க் முறை பின்பற்றப்படுவதில்லை என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, மனுதாரரின் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாக கூறி, சிபிஎஸ்சி மற்றும் பிற போட்டி தேர்வுகளில் நெகடிவ் மார்க் முறையை முழுமையாக அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதுகுறித்த கேள்விக்கு தனியார் தொலைக்காட்சியில் பதில் அளித்த பத்ரி சேஷாத்ரி மிகத் தெளிவாக ஏன் நெகட்டிவ் மதிப்பெண்கள் வேண்டும் என்று கூறி உள்ளார். அவரது கருத்துகள்:

இந்தியாவில் லட்சக்கணக்கான மாணவர்கள் மிகக்  குறைந்த எண்ணிக்கையிலான இடங்களுக்காகப் போட்டி போடுகிறார்கள். அவ்வாறு இருக்கும் போது, இது போன்ற உயர்தர கல்விக் கூடங்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் கொண்டு வந்ததன் நோக்கமே, தகுதி அற்றவர்களை முதலில் கழித்துக் கட்டுவதன் வாயிலாகத் தேர்ந்த திறமையான மாணவர்கள் தகுதி பெறுவார்கள் என்பதே முக்கியம் என்றார்.

அவ்வாறு நெகட்டிவ் மதிப்பெண்கள் கொடுக்கவில்லை எனில், மூன்றில் ஒரு பங்காக நீங்கள் ஏதேனும் ஒரேயொரு ஆப்ஷனைத் தேர்வு செய்தாலே, உங்கள் மதிப்பெண்களும் மூன்றில் ஒரு பங்கு வந்துவிடும். இது பதில் தெரியாமலேயே அனைத்துக் கேள்விகளுக்கும் எந்த அச்சமுமின்றி மாணவர்கள் பதில் அளிப்பார்கள். அதற்குப் பதிலாக , பதில் தெரியாத கேள்விகளுக்குக் குறைந்த பட்சம் குருட்டாம்போக்கில் ஏதேனும் ஒரு ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்காமல், முதலில் தெளிவாக பதில் தெரிந்த கேள்விகளுக்குப் பதில் அளிப்பார்கள். நெகட்டிவ் மதிப்பெண்கள் இல்லையெனில், மாணவர்களைக் கழித்துக் கட்டுவது இன்னமும் கடினமான செயலாக இருக்கும் என்றார்.

மேலும் உயர்நீதி மன்ற நீதிபதி, இதுகுறித்து ஏன் கல்வியாளர்களிடம் ஏதேனும் முறையாக விளக்கம் கேட்காமல், இருதரப்பு விவாதங்களின் அடிப்படையில் மட்டும் எப்படி தீர்ப்பு வளன்குக்கியரர்கள் என்று தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார். நிச்சயமாக இந்தத் தீர்ப்பு உச்ச நீதிமன்றத்தில் நிற்காது என்றும் மேலும் தெரிவித்தார்.

(Visited 48 times, 1 visits today)
5+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *