கூட்டணிக்குத் தயார் – மோதி அறிவிப்பு. அரசியல் கட்சிகள் நிலை என்ன

எல்லாப் பழைய நண்பர்களுக்கும் கூட்டணிக்கான கதவுகள் திறந்தே இருக்கிறது என்று மோதி தெரிவித்தார். தமிழகத்தில் உள்ள பாஜக தேர்தல்பணிக்குழுவினரோடு பேசும்போது தமது கட்சி மாநிலக்கட்சிகளோடு கூட்டணிக்குத் தயாராகத்தான் உள்ளது என்று பிரதமர் கூறினார். ஆனாலும் முதன்மையான கூட்டணி மக்களோடுதான் என்றும் அவர் கூறினார்.

பொருளாதாரரீதியிலான இட ஒதுக்கீடு, ராமர் கோவில் வழக்கு, சபரிமலைப் பிரச்னை, வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு மாதம்தோறும் நேரடியான உதவித்தொகை போன்ற நிகழ்ச்சிகளால் மீண்டும் பாஜக ஆட்சியைப் பிடிக்கும் என்று கருதப்படுகிறது. ஒரு வேளை தனிப்பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்க முடியாவிட்டால், கூட்டணி ஆட்சி ஏற்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அதிமுக, திமுக, மதிமுக, பாமக, தேமுதிக என்று தமிழகத்தின் முக்கியமான எல்லாக் கட்சிகளும் பாஜகவோடு கூட்டணி வைத்துக்கொண்டவைதான். இப்போது இதில் யாரை பிரதமர் குறிப்பிடுகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாஜகவோடு ஒருபோதும் கூட்டணி இல்லை என்று திமுக தலைவர் ஸ்டாலின் இன்று கூறியுள்ளார். ஆனாலும் சிலநாட்களுக்கு முன்னர் பெங்களூரு சிறையில் திருமதி சசிகலாவை காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த நடிகை விஜயசாந்தி நேரில் சந்தித்து ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக உரையாடி இருந்தார். டி டி வி தினகரனோடு காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என்று அப்போது பேச்சு எழுந்தது. இரண்டு முறை மாநிலத்தில் ஆட்சியைக் கைவிட்ட திமுகவிற்கு இந்த நாடாளுமன்றத்தேர்தல் வாழ்வா சாவா போராட்டம் என்பதால், தேர்தலுக்குப் பின் திமுக பாஜகவோடு கூட்டணி அமைக்கும் வாய்ப்பு உள்ளது என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

(Visited 20 times, 1 visits today)
0

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *