நடிகர் சரத்பாபு மீது அவரது முன்னாள் காதலி நடிகை ரமா பிரபா காவல் நிலையத்தில் புகார்

என் சொத்துக்கள் அனைத்தையும் நடிகர் சரத்பாபு அபகரித்துக் கொண்டார் என்று, அவரது முன்னாள் காதலி பிரபல தெலுங்கு நடிகை ரமா பிரபா போலீசில் புகார் கூறியுள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா படங்களில் ஹீரோ, குணச்சித்திர வேடங்களில் நடித்திருப்பவர் நடிகர் சரத்பாபு. தமிழில் ஏராளமான ரஜினியின் படங்களில் நடித்தவர். முத்து, அண்ணாமலை, முள்ளும் மலரும் என பல படங்களில் நடித்தவர்.

நடிகர் சரத்பாபு, 1980களில் தெலுங்கில் பிரபல நடிகையாக இருந்த ரமா பிரபா என்பவருடன் திருமணம் செய்யாமலேயே ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

சில ஆண்டுகளுக்குப் பின்னர் இவர்கள் பிரிந்து விட்டனர். தற்போது  நடிகை ரமா பிரபா, சென்னையில் உள்ள எனது சொத்துக்ளை சரத்பாபு ஏமாற்றி பறித்துவிட்டார் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதுபற்றி விளக்கம் அளித்துள்ள நடிகர் சரத்பாபு, “அவருக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் ஒரு வீடு மட்டுமே இருந்தது. எக்மோர் பெனிபிட் சொசைட்டியில் இருந்த மற்றொரு வீடு பிரச்னையில் இருந்தது. அவர் அதை முதல் கணவரிடம் இருந்து வாங்கினார் என தெரிந்துகொண்டேன். நான் என் விவசாய நிலங்களை விற்று அவருக்கு உமாபதி தெருவில் அவருக்கு ஒரு வீடு வாங்கி கொடுத்தேன். அவரின் மற்ற வீடுகளுக்கும் லட்சக்கணக்கில் செலவு செய்து புதுப்பித்தேன்.”

“நான் அவருக்கு வாங்கி கொடுத்த என்னுடைய வீட்டை தான் திரும்ப எடுத்து கொண்டேன்” என சரத்பாபு விளக்கம் கொடுத்துள்ளார்.

(Visited 47 times, 1 visits today)
1+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *