பிரபல சின்னத்திரை நடிகை தூக்கு போட்டுத் தற்கொலை

சூர்யா என்பவரைக் காதலித்து வந்த பிரபல தெலுகு சின்னத்திரை நடிகை ஜான்சி தூக்கில் போட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு வயது 21 தான் ஆகிறது. மா டிவியில் வெளிவந்த பவித்ரா பந்தன் என்ற சீரியலில் நடித்து வந்தார். நான்கு வருடங்களாகக் காதலித்து வந்த இவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. சிலகாலம் கழித்து ஜான்சி சூர்யாவைத் தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளார். ஆனால் சூர்யா பதில் ஏதும் அளிக்காமல் தட்டிக் கழித்துள்ளார்.

இதனால் மனமுடைந்த ஜான்சி பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டித் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அறிந்த காவலர்கள், அவரது வீட்டிற்குச் சென்று விசாரித்தனர். மேலும் அவர் பயன்படுத்திய கைபேசியை எடுத்துச் சென்றுள்ளனர்.

தன மகள் இறந்ததைப் பார்த்த பெற்றோர் கதறி அழுதனர். இதை அருகில் இருந்து பார்த்த நண்பர்களும் உறவினர்களும் மிகுந்த சோகத்திற்கு உள்ளாகினர்.

(Visited 20 times, 1 visits today)
1+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *