சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் தனது மூத்த மகள் கதீஜாவுடன் மும்பையில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகி பெரிய அளவில் விவாதங்களை உண்டாக்கியது.
அம்புகைப்படத்தில் ரஹ்மானின் மகள் இஸ்லாமிய முறைப்படியான தோற்றத்தில் உடையணிந்நிருந்தார்.
இது சமூக ஊடகங்களில் பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தியது. ரஹ்மான் தனது குழைந்தகளிடம் தனது மத அடையாளங்களை திணிக்கிறார் என்ற ரீதியில் விமர்சனங்கள் எழுந்தன.
இந்த விமர்சனங்களுக்கு பதில் கொடுக்கும் வகையில் ரஹ்மான் தனது மனைவி ,இரு குழந்தைகள் மற்றும் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானியுடன் இருக்கும் புகைப்படத்தை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
அப்புகைப்படத்தின் மூலம் உடை தன் வீட்டு பெண்களில் விருப்ப தேர்வு என்றும் தான் அதில் தலையிடுவதில்லை என்றும் விமர்சகர்களுக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்துள்ளார்.