ஒரு வரிச் செய்திகள்

75 வகையான 39,000 பறவைகள் கணக்கீடு செய்யப்பட்டன

தாமிரபரணி கரையோரம் உள்ள பறவைகள் கணக்கெடுப்பு ஒன்பதாம் ஆண்டாக இந்த ஆண்டும் நடைபெற்றது. அதில் 75 வகையைச் சார்ந்த 39,231  பறவைகளை தன்னார்வலர்கள் கணக்கெடுத்தார்கள்.

கங்கைகொண்டான், சூரன்குடி பகுதிகளில் உள்ள குளங்களின் அருகிலும் வெளிநாட்டுப் பறவைகளை காணமுடிந்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் 32 குளங்களின் அருகிலும்  தூத்துக்குடி மாவட்டத்தில் 12 குளங்களின் அருகிலும் இந்தக் கணக்கீடு செய்யப்பட்டது.

மாவட்ட அறிவியல் மையத்தோடு இணைந்து அகஸ்திய மலை பாதுகாப்பு இயக்கம், திருநெல்வேலி இயற்கை ஆர்வலர்கள் சங்கம் மற்றும் தூத்துக்குடி இயற்கை சங்கத்தின் 120 தன்னார்வலர்கள் இந்தக் கணக்கெடுப்பைச் செய்தனர்.

(Visited 18 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close