இரண்டாவது டி20 போட்டி; இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி
இந்தியா நியுசிலாந்துக்கு இடையே இரண்டாவது டி 20 போட்டி இன்று நடைபெற்றது. இந்திய அணி இந்தப் போட்டியில் வென்றது. இதன் மூலம் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்று சமன் நிலையில் உள்ளது.
முதலில் பேட்டிங் செய்த நியுசிலாந்து 20 ஓவர்களில் 158/8 ரன்களை எடுத்தது. நியுசிலாந்து அணியில் அதிகபட்சமாக கிராண்ட்ஹோம் 50 ரன்களையும், டெய்லர் 42ரன்களையும் குவித்தனர். இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டுகளையும், அஹ்மத் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
இரண்டாவது பேட்டிங் செய்த இந்திய அணியில் ரோஹித் ஷர்மா 50 ரன்களை எடுத்தார். ஷிகர் தவான் 30 ரன்களை எடுத்தார். இதன் மூலமாக இந்திய அணிக்கு நல்லதொரு துவக்கம் கிடைத்தது. ரிஷப் பான்ட் ஆட்டமிழக்காமல் 40 ரன்களையும், தோனி ஆட்டமிழக்காமல் 19 ரன்களையும் எடுத்தார். இதன் மூலமாக இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.