டென்னிஸ் வீராங்களை சானியா மிர்சா வாழ்க்கை திரைப்படமாகிறது
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் வாழ்க்கை வரலாறு படமாக்கப்படுகிறது. முதல் இரட்டையர் பிரிவு டென்னிஸ் போட்டியில் கிராண்ட் ஸலாம் பட்டத்தை வென்ற இந்திய பெண்மணி ஆவார்.
சானியா மிர்சா இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். ஹைதரபாதில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பாலிவுட் இயக்குனர் ரோனி ஸ்கிரிவாலா இப்படத்தை இயக்க உள்ளதாக அறிவித்தார். இதற்கான ஒப்பந்தத்தில் தாம் கையெழுத்திட்டிருப்பதாகவும் படத்தில் சானியா வேடத்தில் நடிப்பது யார் என்பது விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் சானியா மிர்சா தெரிவித்தார்.
இந்த வேடத்தில் சானியா மிர்சாவே நடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே மேரிகோம், டங்கல், பாக் மீகா பாக், எம்.எஸ்.தோனி உள்ளிட்ட திரைப்படங்கள் விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு படமாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சானியா மிர்சா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.