இலக்கியம்

தினம் ஒரு குறள் – சொல்வன்மை

இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது

உணர விரித்துரையா தார்.

 

கற்ற கல்வியைப் பிறருக்கு எடுத்துச் சொல்லாதார், கொத்தாக மலர்ந்தும் மணமற்ற மலர் போன்றவராவர்.

ஆக கல்வி என்பது தான் கற்பதற்காக மட்டும் அல்ல; தான் கற்றதைப் பிறருக்கு எடுத்துச் சொல்லாதவர்க்கு, நன்மதிப்பு என்பது இருக்காது என்பதை வலியுறுத்தவே, என்னதான் கொத்துக் கொத்தாக மலர்ந்திருந்தாலும், மணமற்ற மலரால் ஒரு பயனும் விளையாது எனும் உவமையால் விளக்குகிறார்.

சொல்வன்மை அதிகாரம் முற்றும்.

– சுரேஜமீ

(Visited 34 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close