15 வயது மகளை சீரழித்த சித்தப்பா ; வேறெங்குமில்லை நமது விருத்தாச்சலத்தில் தான்

விருதாச்சலத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை மிரட்டியே பாலியல் வன்புணர்வு செய்துள்ளார், அச்சிறுமியின் சித்தப்பா. விருத்தாசலம் அருகே உள்ள வள்ளியம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவரின் பக்கத்து வீட்டில் பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி வசித்து வந்தார்.

சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது, வீட்டினுள் புகுந்த சின்னதுரை சிறுமியை கற்பழித்துள்ளார்.

வெளியே சொல்லி விடாதே, நம் இருவரின் மானமும்  போய்விடும் என்று சொல்லி  சிறுமியை தடுத்துள்ளார்.  இதேபோல  பல முறை சிறுமியை விரும்பும் போதெல்லாம் மிரட்டி பாலியல் வன்புணர்வு  செய்துள்ளார்.

இதன்காரணமாக அந்தச் சிறுமி கர்ப்பமானார். இதனையறிந்த சின்னதுரை சிறுமிக்கு கருகலைப்பு மாத்திரை கொடுத்து சிசுவை கொலை செய்துள்ளார்.

சமீபத்தில் இது சிறுமியின் பெற்றோருக்கு தெரியவர பேரதிர்ச்சிக்கு ஆளான அவர்கள், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீஸார் அந்த காமக்கொடூரன் சின்னதுரையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆரம்பத்திலேயே அந்த சிறுமி இதைத் தன் பெற்றோரிடம் தெரிவித்து இருந்திருந்தால் நிலைமை இத்தனை மோசமாகி இருக்காது. குழந்தைகளுக்கு பெற்றோர்கள் , யார் தவறான முறையில் அணுகினாலும் உடனே தைரியமாக தங்களிடம் சொல்ல வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டி உள்ளது. அக்கம் பக்கத்தார்,நண்பர்கள், உறவினர்கள் யாரையும் இது போன்ற விஷயங்களில் அளவுக்கு மீறி நம்ப முடியாது என்பதால், தங்கள் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் தயங்காமல் ஆரம்பத்திலேயே சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதே இது போன்ற நிகழ்வுகளில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமாக உள்ளது.

(Visited 35 times, 1 visits today)
0

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *