தமிழகத்தில் மோதி போட்டி இடுகிறாரா ?

தமிழகத்தில் பிரதமர் மோதி போட்டியிடுவார் என்று DNA தொலைக்காட்சி தெரிவிக்கிறது. சென்ற முறை மோதி குஜராத் மாநிலம் வடோராவில் இருந்தும் உத்திரப்பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் இருந்தும் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெற்றார்.

இந்த முறை இரண்டில் ஒரு தொகுதியாக தமிழகத்தில் இருந்து அவர் போட்டியிட உள்ளதாக செய்திகள்  வெளியாகி உள்ளது.  கோவை, திருப்பூர், தென்சென்னை, கன்யாகுமரி ஆகிய தொகுதிகளில் ஏற்கனவே பாஜக வலுவாக உள்ளது.

நாட்டின் பிரதமர் தமிழகத்தில் போட்டி இடும் போது, அந்தத் தொகுதியில் நாட்டின் கவனம் குவியும். அதே போல பிரதான எதிர்க்கட்சியான திமுக தனது முழு பலத்தையும் அதே தொகுதியில் செலவழிக்க வேண்டி இருக்கும். இது மற்ற தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு பின்னடைவை உண்டாக்கும்.

பிரதமர் போட்டியிடுவதால் தமிழகம் முழுவதும் பாஜக கூட்டணிக்கு மிகப் பெரும் உத்வேகம் இருக்கும். ஏற்கனவே உபி முதல்வர் யோகி, பாஜக தலைவர் அமித்ஷா மற்றும் பிரதமர் மோதி பிப்ரவரி மாதமே தமிழகம் வருகின்றனர். ராமலிங்கத்தின் குடும்பத்தினரை அமித்ஷா நேரில் சந்திப்பர் என்று தெரிகிறது.

தமிழகத்தில் இருந்து இதுவரை எந்த பிரதமரும் தேர்வாகவில்லை என்பதும் தமிழகத்தை பாஜகவிற்கு சாதகமாக அமையும். ஏற்கனவே தமிழகத்தில் ஹிந்து எழுச்சி உருவாகி இருப்பதாக உளவுத்துறை அறிக்கை தெரிவிக்கிறது. அதை விட முக்கியமாக சிறுபான்மை மதத்தினரை தாஜா செய்யும் போக்கு திமுகவின் மீது வெறுப்பை உண்டாக்கி உள்ளது.

அதிலும் தொடர்ச்சியான ஹிந்து இயக்கத்தினர்களின் படுகொலையும் அதனை சரியான முறையில் கையாளாத காவல்துறையும், கிருத்துவ மத போதகர்கள் ஹிந்து விரோத பேச்சுகளும், ஆண்டாளைப் பற்றிய வைரமுத்துவின் அவதூறுப் பேச்சும், திருச்சி ஜோசப் கல்லூரி மற்றும் சென்னை லொயோலா கல்லூரிகளில் நடைபெற்ற ஹிந்து விரோத நிகழ்ச்சிகளும் எல்லாவற்றிக்கும் மேலாக தற்போது நடைபெற்ற ராமலிங்கத்தின் படுகொலையும் நடுநிலைமை பேசிவந்த ஹிந்துக்களின் மனதை மாற்றி உள்ளது.

ராமலிங்கத்தின் படுகொலை நடந்து இரண்டு நாட்களுக்கு மேலாக தமிழகத்தில் உள்ள எந்த பத்திரிகையோ  அல்லது தொலைக்காட்சி நிறுவனமோ இந்தச் செய்தியை வெளியிடவேயில்லை. தொடர்ச்சியான இணையதள பரப்புதலால் வேறுவழி இல்லது திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டு உள்ளார்.

பாஜகவில் உறுப்பினராக இல்லாத பொதுமக்கள் பலரும் தங்கள் சமுதாய வலைத்தளங்கள் மூலமாக இந்த மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளனர்.

இதன் பின்னணியில் மோதி தமிழகத்தில் போட்டி இடுவது என்பது பாஜகவை தமிழகத்தில் வலுவாக காலூன்ற வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

(Visited 28 times, 1 visits today)
2+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *