வரலாற்றில் இன்று – ஜனவரி 13
விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியன் ராகேஷ் ஷர்மாவின் பிறந்ததினம் இன்று. 1949ஆம் ஆண்டு பஞ்சாபில் உள்ள பாட்டியாலா நகரத்தில் பிறந்த இவர் தனது ஆரம்பக்கல்வியை ஹைதராபாத் நகரில் முடித்தார். 1970 ஆம் ஆண்டு இந்திய விமானப்படையில் இணைந்தார்.
சோவியத் நாட்டுடன் இணைந்து நடைபெற்ற விண்வெளி ஆராய்ச்சியின் பகுதியாக திரு ராகேஷ் ஷர்மா 1984ஆம் ஆண்டு விண்வெளிக்குச் சென்றார். விண்வெளியில் இருந்து காணொளி மூலம் அவர் அப்போதைய பிரதமர் திருமதி இந்திரா காந்தி அவர்களைத் தொடர்பு கொண்டு பேசினார்.
விண்ணில் இருந்து பார்க்கும்போது இந்தியா எவ்வாறு இருக்கிறது என்ற பிரதமரின் கேள்விக்கு கவிஞர் இக்பாலின் புகழ் பெற்ற ” சாரே ஜஹான் ஸே அச்சா, ஹிந்தோஸ்தான் ஹமாரா” – பாரில் எல்லா தேசங்களிலும் எங்கள் தேசம் உயர் தேசம் என்று பதிலளித்தார்.
இந்திய நாட்டின் விண்வெளி வரலாற்றில் ராகேஷ் ஷர்மாவிற்கு ஒரு தனி இடம் உண்டு.