தனியார் கேபிள் டிவி நிறுவனங்கள் மீது மக்கள் சரமாரி புகார்

டிராய் பிப்ரவரி 1 முதல் 100சேனல்களை 153 ரூபாயில் பார்க்கலாம் என்று அறிமுகப்படுத்தியது. கேபிள் டிவியில் , ஒரு குறிப்பிட்ட பாக்கேஜ் என்று சொல்லி , புதிய மாதக் கட்டணத்தை  தனியார் கேபிள், ‘டிவி’ நிறுவனங்கள் வாடிக்கையாளர்களிடம் திணிக்கின்றனர் என்று புகார்கள் எழுந்துள்ளன. வாடிக்கையாளர்கள் தாங்கள் விரும்பிய சேனல்களுக்கு மட்டும், கட்டணம் செலுத்தி பார்க்கும் வசதி, பிப்., 1 முதல் நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி, ஒவ்வொரு சேனலும், தங்கள் கட்டணத்தை விளம்பரப்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் தான் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் முயற்சியில் கேபிள் ஆப்பரேட்டர்கள் இறங்கி உள்ளதகாக சரமாரி புகார்கள் எழுந்துள்ளன.

 

இது குறித்து, தனியார் கேபிள் டிவி ஆப்பரட்டேர்கள்  கூறியதாவது:மக்கள், தாங்கள் விரும்பும் சேனல்களை பார்க்க வேண்டும் என்பதற்காக, புதிய கட்டண முறையை, ‘டிராய்’ அறிமுகப்படுத்தியது.இதன்படி, பலர் தாங்கள் விரும்பிய சேனல்களுக்கு மட்டும் கட்டணம் செலுத்தி பார்க்கின்றனர்.இதற்கு, மக்களிடம் அதிகம் வரவேற்பு கிடைத்தாலும், கட்டணம் அதிகமாக உள்ளது என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதைப் பயன்படுத்தி, சில குறிப்பிட்ட சேனல்களை மட்டும், ஒரு தொகுப்பாக நிர்ணயிக்க, தனியார் கேபிள், ‘டிவி’ நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இந்த தொகுப்பு சேனல்களை மட்டும், மக்களிடம் அதிகம் எடுத்து செல்ல, கேபிள், ‘டிவி’ நிறுவனங்கள் எங்களை வலியுறுத்துகின்றன. இது, டிராயின் உத்தரவை மீறும் வகையில் உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

(Visited 24 times, 1 visits today)
1+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *