மாநில அரசின் விழாக்களில் தேசிய கீதம் பாட வேண்டிய அவசியமில்லை -சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி, கவர்னர் பன்வாரிலால் புரோகித், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்ட மதுரை  எய்ம்ஸ் அடிக்கல் நாட்டுவிழா மற்றும் சென்னை மெட்ரோ, ஈ எஸ் ஐ திறப்பு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் பாடப்படவில்லை. அரசு விழாக்களில், மரபையும் சட்டத்தையும் மீறிய செயல் என்று வேம்பு என்பவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து இருந்தார்.  இதற்கு தமிழக தலைமைச் செயலகம் விளக்கம் அளிக்கக் கோரி வழக்கைத் தாக்கல் செய்து இருந்தார்.

 

இதனை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், இந்த வழக்கைத் தள்ளுபடி செய்துள்ளது. அனைத்து மாநில அரசு விழாக்களிலும் தேசிய கீதம் பாட வேண்டிய அவசியமில்லை, இதைக் கட்டாயப்படுத்தி தங்களால் அரசை வற்புறுத்த முடியாது என்று நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

 

பிரதமர் அலுவலகம் கூட இதுகுறித்த விழாக்களில் தேசிய கீதம் பாடாமல் இருப்பது குறித்து கவனம் செலுத்தாமல் எப்படி இருக்கலாம் என்றும் மரபு காப்பாற்றப்பட வேண்டும் என்றும் எதிர்க்கருத்துடையவர்கள் தெரிவித்து உள்ளனர்.

(Visited 5 times, 1 visits today)
0

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *