ராஜா ராணி ஹீரோ ஹீரோயின் நிஜக் காதல்; திருமணம் எப்போது?

விஜய் டிவியில் ராஜா ராணி என்ற சீரியல் மக்களிடம் அதிக வரவேற்பு பெற்றிருக்கிறது. விஜய் டிவியில் சிவா-ஸ்ரீஜா ஜோடி ஏற்கனவே சீரியலில் நடித்து திருமணம் செய்து உள்ளனர். அவர்களைப் போல பல நடிகர்கள் -நடிகைகள் சீரியலில் ஜோடியாக நடிக்க ஆரம்பித்து, மெல்ல காதல் அரும்பி அவர்களே திருமணம் செய்து கொண்டுள்ளதற்கு பல முன்னுதாரணங்கள் உள்ளன.

அந்த வரிசையில் ராஜா ராணி சீரியலில்  நாயகன்-நாயகியாக நடித்திருக்கும் ஜோடிகள் சஞ்சீவ்-ஆல்யா மானசா இருவரும் நிஜத்திலும் காதலர்களாக மாறியுள்ளனர்.

உங்கள் திருமணம் எப்போது என்ற கேள்விக்கு அவர்கள் பதில் அளித்துள்ளனர்.

இதுகுறித்து ஒரு விருது விழாவில் அவர்களிடம் கேட்க அவர்கள் இப்போதைக்கு திருமணம் கிடையாது, நடிப்பில் முதலில் கவனம் செலுத்துவோம் என்று கூறியுள்ளார்.

(Visited 13 times, 1 visits today)
1+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *