மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் -சென்னையில் ஏரோ தொழிநுட்ப பூங்கா

மத்தியில் பாஜக அரசு 2014 ம் ஆண்டு ஆட்சி அமைந்த பின் மேக் இன் இந்தியா திட்டத்தை பெரிய அளவில் முன்னெடுத்துள்ளது.
இந்த திட்டத்தை  பயன்படுத்தும்  வகையில் , 2016 ஆம் ஆண்டு தமிழக வான்வெளி மற்றும்  பாதுகாப்பு  ஆயுத உபகரணங்கள் உற்பத்தி தொழில் முனைவோர் குழு ஓன்று ஏற்படுத்தப்பட்டது.
தற்போது  வான்வெளி மற்றும்  பாதுகாப்பு  ஆயுத உபகரணங்கள் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் நடுத்தர மட்டும் சிறு தொழிற்சாலைகளுக்கான  ஏரோ பார்க் என்று சொல்லப்படும்    உற்பத்தி பூங்காவிற்கான பணிகள் சென்னையை அடுத்துள்ள ஒரகடம் பகுதியில் வேகமாக நடைபெறுகிறது.
இந்த ஏரோ பூங்காவில் சிங்கப்பூரை சேர்ந்த ஒரு நிறுவனம் எலக்ட்ரானிக் சோதனை மையத்தை 4 ஏக்கரில் அமைக்க இருப்பதாக மிழக வான்வெளி மற்றும்  பாதுகாப்பு  ஆயுத உபகரணங்கள் உற்பத்தி தொழில் முனைவோர் குழுவின் தலைவர் திரு .சேகர் தெரிவிக்கிறார். மேலும் தமிழக அரசு நிறுவனங்களான டிட்கோ மற்றும் டைசல் இணைத்து சுமார் 200 கோடி செலவில்  மேம்பட்ட கணினி மற்றும் வடிவமைப்பு பொறியியல் மையம்ஒன்றை அமைப்பதற்கான பூர்வாங்க பணிகளை தொடங்கியிருப்பதாகவும் திரு.சேகர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மட்டும் சுமார் 200 தொழிற்சாலைகள் வான்வெளி மற்றும்  பாதுகாப்பு  ஆயுத உபகரணங்கள் தயாரிப்பில்செயல்பாட்டுக்கு கொண்டிருப்பதாகவும் ,அவை இஸ்ரோ, மத்திய அரசின்  நிறுவனங்களான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிஸ்க்ஸ் மமற்றும் டிஆர்டிஓ நிறுவனங்களின் உற்பத்தி பணிகளில் முக்கிய பங்கை ஆற்றுவதாகவும் திரு.சேகர் தெரிவித்தார்.
வருங்காலங்களில் சுமார் 1 பில்லியன் டாலர் முதலீடு இந்த தொழிற்சாலைகளில் வர இருப்பதாகவும் ,அதன் மூலம் அடுத்த 15 ஆண்டுகளில் சுமார் 1 லட்சம் வேலைவாய்ப்புகள் புதிதாக ஏற்படுத்தப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
(Visited 30 times, 1 visits today)
1+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *