தக்க பதிலடி கொடுங்கள் பிரதமர் மோடியே… வலுக்கும் மக்கள் கோரிக்கை;

காஷ்மீர் புல்வாமாவில்  சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனத்தைக் குறி வைத்து, ஜெய்ஷ் இ முகமது  என்ற இஸ்லாமிய பயங்கரவாதிகள் அமைப்பு நடத்திய தாக்குதலில் 44 பேர் வீரமரணம் அடைந்தனர். மேலும் 45 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

காஷ்மீரில், ஸ்ரீநகர் நோக்கி 70 வாகனங்களில் 2,500 சிஆர்பிஎப் வீரர்கள் தங்கள் விடுப்பு முடிந்து பணிக்கு திரும்பிச்சேர சென்று கொண்டிருந்தனர். இந்நேரத்தில் ஒரு பயங்கரவாதி வெடிகுண்டுகாரை ஓட்டி வந்துள்ளான். இந்த கார் வீரர்கள் சென்ற கான்வாயில் புகுந்தது. காரை மோதியதும் அதில் இருந்த வெடிகுண்டுகள் வெடித்து சிதறின.

இந்த காரை ஓட்டி வந்தவன் அடில் அகமது எனவும், அவன் புல்வாமா மாவட்டம் காக்கிபோரா பகுதியை சேர்ந்தவன் எனவும் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு தான் பயங்கரவாத அமைப்பில் இணைந்துள்ளான். தொடர்ந்து பயங்கரவாதிகள் வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர்.

இந்தக் கொடூர தாக்குதலை எதிர்த்தும், தேசத்தைக் காக்கும் பணியில் ஈடுபட்டு  தங்கள் இன்னுயிரைத் தந்த வீரர்களுக்கு இரங்கல் தெரிவித்து வரும் பொதுமக்கள், பாரத பிரதமர் மோடியிடம், “நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கிறோம். இதுபோன்ற தீவிரவாத அமைப்புகளை வேரோடு அறுக்கும் நேரம் வந்துவிட்டது. உங்களால் மட்டுமே தக்க பதிலடியைத் தரமுடியும். நிச்சயம் பாகிஸ்தான் இதன் பின்னால் உள்ளது.”

“நீங்கள் எந்த நடவடிக்கையை எடுத்தாலும் தேசமே உங்களுக்குத் துணை நிற்கும். இவர்கள் இருக்கும் சுவடி தெரியாமல் அழித்து விடுங்கள் என்று கொந்தளித்துப் போய் தங்கள் கோபத்தையும், இரங்கலையும் தெரிவித்து உள்ளனர்.” இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளை உலக நாடுகள் ஒன்றிணைந்து வேரறுக்காவிட்டால் உலகின் ஒவ்வொரு நாட்டிலும் இவர்கள் இப்படித் தான் அத்து மீறுவார்கள் என்று பதிவிட்டு வருகின்றனர்.

உலகின் அனைத்து நாடுகளும் இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளது.

(Visited 13 times, 1 visits today)
2+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *