மத்திய கிழக்கு நாடுகளில் குறைந்து வரும் வேலைக்குச் செல்வோர்களின் எண்ணிக்கை

கடந்த நான்கு ஆண்டுகளில் மத்திய கிழக்கு நாடுகளில் வேலைக்குச் செல்வோர் எண்ணிக்கை பெருமளவு குறைந்து வருகிறது.  2018 ஆம் ஆண்டில்  ஐக்கிய அரபு எமிரேட்டிற்கு 1,03,720 இந்தியாவிலிருந்து பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளனர். இதுவே அதிக அளவிலான எண்ணிக்கை. இதே ஐக்கிய அரபு நாடுகளுக்கு 2014 ல் 2,24,337 பேர் பணி நிமித்தமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

 

சவூதி அரேபியாவிலும் இதே நிலைதான். 2014 ல் 3,29,882 பேர் சென்றனர். 2018 ல் வெறும் 65542 பேர்தான் சென்றுள்ளனர். மற்ற மத்திய கிழக்கு நாடுகளிலும் இதேநிலை தான் என்பதை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்தியர்கள் அதிக அளவில் வேலைக்குச் செல்லும் நாடுகளில் முதன்மையானது மத்திய கிழக்கு நாடுகள்.

 

மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றவர்களின் எண்ணிக்கை ஆண்டு வாரியாக :

2014 – 7,75,845 பேர். 2017 – 3,74,324 பேர். 2018 – 2,94,837 பேர்.

2017/2018 கணக்கை ஒப்பீட்டுப் பார்த்தால் (-23%) பேர் குறைவாக பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு சென்றுள்ளனர். இதையே 2014/2018 கணக்கை ஒப்பீட்டுப் பார்த்தால் (-62%) பேர் குறைவாக பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு சென்றுள்ளனர். குறிப்பாக பொறியியல், கட்டுமானம், ஆட்டோ மொபைல் மற்றும் கூலித் தொழிலாளிகள் இதனால் பெருமளவிற்குப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மேலும் கடந்த இரு ஆண்டுகளில் பலரும் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

(Visited 30 times, 1 visits today)
0

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *