செய்திகள்விளையாட்டு
உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் குழந்தைகள் கல்விச் செலவை ஏற்கத் தயார் -வீரேந்திர சேவாக்
புதுடெல்லி: புல்வாமா தாக்குதலில் 44 வீரர்கள் இதுவரை உயிர்த் தியாகம் செய்துள்ளனர். நாம் செய்யப் போகிற எதுவும் அவர்களின் இழப்பை ஈடுகட்டப்போவதில்லை. இருந்தாலும் நம்மாலானதைச் செய்வோம். அவர்களின் குடும்பத்தில் உள்ள குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்கத் தயார் என வீரேந்திர சேவாக் தமது ட்விட்டர் பக்க செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
சேவாக்கை போல, ஹரியானா காவல் துறையில் பணிபுரியும் குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங் தமது பங்கிற்கு தனது ஒரு மாதச் சம்பளத்தை உயிர்த் தியாகம் செய்துள்ள வீரர்களின் குடும்பத்திற்குத் தரப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
(Visited 25 times, 1 visits today)