அமெரிக்காவில் ‘தி வேர்ல்ட் பெஸ்ட்’ என்ற பெயரில் ஒரு தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோ நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரம் என்ற சிறுவனும் கலந்து கொண்டான். இந்த சிறுவன் 1900ம் ஆண்டு வெளிவந்த பிளைட் ஆப் தி பம்பிள்பி (Flight of the bumblebee) என்ற இசையை பியானோவில் வாசிக்கத் தொடங்கினார். ஒட்டு மொத்த அரங்கையும் தனது அதிவேக பியானோ வாசிப்பின் மூலம் கவனத்தையும் பாராட்டையும் பெற்றான்.
பியானோ இசைக்கருவியை வேகமாக வாசித்து உலக அரங்கையே அதிர வைத்த சென்னை சிறுவன் லிடியன் நாதஸ்வரத்தை ஏஆர் ரகுமான்,அனிருத் உள்ளிட்ட பலரும் பாராட்டி வருகின்றனர்.
ஆரம்பத்தில் மெதுவாக பியானோவை இசைத்த சிறுவன் லிடியன் நாதஸ்வரம் , பின்னர் வேகமெடுத்து சடசடவென வாசித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். அனைவரும் எழுந்து நின்று பாராட்ட, இதை விட தன்னால் பல மடங்கு வேகத்தில் வாசிக்க முடியும் என்று மீண்டும் வாசிக்கத் தொடங்கினார். முதலில் சாதாரணமாக வாசித்த சிறுவன், தொடர்ந்து நிமிடத்துக்கு 208 பீட்ஸ், அடுத்ததாக 325 பீட்ஸ் என்று வேகத்தின் உச்சிக்கு சென்று அசத்தினார்.
பியானோவில் லிடியன் புகுந்து விளையாடியதை அரங்கத்தில் இருந்த நடுவர்கள் உட்பட அனைவரும் மூக்கின் மேல் விரல் வைத்து பார்த்தனர். சிறிதும் பிழையில்லாமல், துணிச்சலாகவும் விவேகமாகவும் வாசித்த லிடியனின் வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வர, அதனைப் பார்த்த பிரபலங்களும் ஆச்சரியமடைந்து தங்களது சமூகவலைதள பக்கங்களில் பகிர்ந்து பாராட்டி வருகின்றனர். அதைக் கண்டுகளித்த அவரது தந்தையின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வடிந்தது.
சென்னையைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரத்தை ஏஆர் ரகுமான், அனிருத் உட்பட பலரும் பாராட்டியுள்ளனர். அவர் இசைத்த பியானோ வீடியோ