செய்திகள்விளையாட்டு
கிரிஸ் கெயில் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்
50 ஓவா் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக மேற்கு இந்திய தீவுகள் அணி வீரா் கிறிஸ் கெயில் அறிவித்துள்ளாா்.
இதுவரை ஒருநாள் போட்டிகளில் 1 இரட்டைசதம், 23 ஒருநாள் சதம் , 49 அரை சதங்களை விளாசியுள்ளார். மேலும் 9727 ரன்களை அவர் கலந்து கொண்ட 284 போட்டிகளில் எடுத்துள்ளார். அவர் தான் மேற்கு இந்திய தீவு அணியில் ஒருநாள் போட்டியில் அதிக சதங்களை அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றவர்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் கிரீஸ் கெயில் விளையாட்டைப் பார்க்கவே ஒரு ரசிகர் கூட்டம் இருந்தது. பந்து வீச்சிலும் கெயில் பலசாதனைகளைப் படைத்துள்ளார். ஒருநாள் போட்டியில் 165விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். ஒருமுறை மேற்கு இந்திய தீவு கிரிக்கெட் போர்டிடம் சண்டையிட்டு சில போட்டிகளில் பங்கேற்ற இயலாத நிலைமையும் ஏற்பட்டது.
(Visited 41 times, 1 visits today)