இந்தியா வந்தடைந்தார் சவுதி இளவரசர் முகம்மது பின் சல்மான்

புதுடில்லி: ,சவுதி அரேபியாவின் இளவரசர் முகம்மது பின் சல்மான் இன்று(பிப்.,19) இரவு அரசு முறைப்பயணமாக இந்தியா வந்தார். டில்லி விமான நிலையத்தில் அவரை பிரதமர் மோடி, வரவேற்றார். சல்மானுடன் அமைச்சர் குழுவினரும் வந்தனர்.

நாளைய சந்திப்பில், ட்ரேடிங் உறவு பற்றியும், இரு அரசுகளும் சில ராணுவ ஒப்பந்தங்களை மேற்கொள்ள உள்ளது. அதன் படி இரு நாட்டு வீரர்களும் போர்ப் பயிற்சியில் ஒன்றாக ஈடுபடுவது உள்ளிட்ட ஒப்பந்தகள் கையெழுத்தாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதில் இந்தியா புல்வாமா தீவரவாதத் தாக்குதலில் பாகிஸ்தானின் பின்னணி உள்ளது என்பதை பற்றி விளக்கும் என்று எதிர்ப்பார்க்கபடுகிறது. ஆனால் சவுதி இதற்கு எந்த அளவு ஆதரவு அளிக்கும் என்று தெரியவில்லை. இதற்குக் காரணமுள்ளது.

பாகிஸ்தானை அனைத்து சூழ்நிலையிலும் ஆதரிப்போம் என்று நேற்றுதான் அங்கு பேசி உள்ளார். நாளை இரவு அவர் இந்தியாவிலிருந்து கிளம்புவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

 

(Visited 14 times, 1 visits today)
0

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *