மசூத் அசாரை பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க ஐநாவிடம் வலியுறுத்தவுள்ள பிரான்ஸ் -அஜித் தோவலின் முயற்சிக்கு கிடைக்க உள்ள வெற்றி

காஷ்மீர், புல்வாமாவில் கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலில் 40 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.  இதற்குப் பொறுப்பேற்றுக் கொண்டது  ஜெய்ஷ்-எ-முகமது அமைப்பு. அதன்  தலைவராக உள்ளவர்  மசூத் அசார். அவருக்குத் தடை விதிக்க இன்னும் 2 நாட்களில் ஐநாவிடம் பிரான்ஸ் வலியுறுத்த முடிவெடுத்துள்ளது. மேலும் அவரை தீவிரவாதிகள் பட்டியலில் சேர்க்கவும் ஐநாவை வலியுறுத்த உள்ளது பிரான்ஸ்.

“பயங்கரவாதிகள் பட்டியலில் ஜெய்ஷ்-எ-முகமது அமைப்பைச் சேர்ந்த  மசூத் அசாரைச் சேர்க்க ஐநா.வில் பிரான்ஸ் முன்மொழிவை இன்னும் 2 நாட்களில் மேற்கொள்ளும்” என்று மூத்த பிரான்ஸ் அதிகாரி ஒருவர் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

2017-ல் பிரிட்டன், பிரான்ஸ் ஆதரவுடன் பாகிஸ்தானில் செயல்படும் இந்த பயங்கரவாத அமைப்பின் தலைவருக்கு தடை விதிக்கும் கோரிக்கையை முன்வைத்தனர். ஆனால் இந்த முன்மொழிவை சீனா தடுத்து விட்டது.

பிரான்ஸ் அதிபரின் ராஜிய உறவுகளுக்கான ஆலோசகர் பிலிப் எடியன் மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருக்கிடையே பிப்.19ம் தேதி நடந்த ஆலோசனைகளை அடுத்து பிரான்ஸ் இந்த முடிவை எட்டியுள்ளதாக பிரான்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முழுமனதுடனான தங்கள் இரங்கலைத் தெரிவித்த பிரான்ஸ் தலைமை அஜித் தோவலை அழைத்து இருநாடுகளும் தங்கள் அரசுதரப்பு முயற்சிகளை  ஒருங்கிணைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

(Visited 5 times, 1 visits today)
0

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *