சிறப்புக் கட்டுரைகள்செய்திகள்ஜோதிடம்

ஸ்ரீ நரேந்திர தாமோதர தாஸ் மோதி – ஜாதகக் குறிப்பும் பலன்களும்

நமது பிரதமர் மாண்புமிகு ஶ்ரீ நரேந்திர தாமோதரதாஸ் மோதி அவர்களின் ஜாதக குறிப்பு, பலன்கள், தேவைப்படும் பரிகாரங்கள்.

நடப்பு தசா புக்தி – சந்திர தசை, கேது புக்தி.

 • புதன் 11ஆவது இடத்தில் ஆட்சியில் இருப்பதால் பர்வத யோகம் அமைகிறது – இது நிலையான செல்வாக்கு தரும்.
  சந்திரன் செவ்வாய் சேர்ந்திருப்பதால் சசி யோகம் அமைகிறது – ஜாதகதாரர் வேண்டாம் என்றாலும் லக்ஷ்மி அகலமாட்டாள்.
 • சூரியன் புதன் சேர்ந்திருப்பதனால் நிபுண யோகம் அமைகிறது – எதையும் ஆழ்ந்து அலசி ஆராயும் திறன்மிக்கவர் ஜாதகதாரர்.
 • குரு சந்திரனுக்கும் லக்னத்துக்கும் 4 ல் இருப்பதால் கேசரி யோகம் அமைகிறது – ஜாதகதாரரை யாராலும் வெல்ல இயலாது.
 • நீசம் அமைந்த சந்திரனுக்கு இடம் கொடுத்த செவ்வாய் அதே வீட்டில் ஆட்சி செலுத்துவதால் நீச்ச பங்க ராஜயோகம் அமைகிறது – நீச்ச பங்க ராஜயோகம் இருக்கையில் பொதுவாகவே தசா புக்தி நடப்பின் அடிப்படையில் உயர்நிலைகளை அடைவார்கள். இந்த ஜாதகதாரருக்கு சந்திரதசை நடப்பதால் கண்டிப்பாக உன்னதநிலைக்கு வருவார்.
 • ஜாதகதாரர் சனி பகவானுக்கு ப்ரீதி செய்து கொள்வது நலம் பயக்கும்.

ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நக்ஷத்திரங்கள் புதன் கிழமை வரும் நாளில் நல்ல காரியங்கள் (வேட்புமனு தாக்கல், தேர்தல் பிரச்சாரம் தொடக்கம் போன்றவை) தொடங்குவது வெற்றி நிச்சயம் தரும்.

ஜாதகத்தில் தற்போதைய கிரஹ நிலைகளின் படி எதிர்ப்பு அதிகமாக இருக்கும். ஆனால் இவரை வெல்ல முடியாது. இருந்த போதும் எதிர்ப்பின் தாக்கத்தை மட்டுப்படுத்த ஜாதகதாரர் கீழ்க்கண்ட பரிகாரங்கள் செய்து கொள்வது சிறப்பு.

 • காளஹஸ்தி, திருப்பதி, திருச்செந்தூர் ஆகிய தலங்களில் சுவாமி தரிசனம் செய்யவேண்டும்.
 • துளசி செடி வளர்த்து (ஓம் க்லீம் க்லீம் நம:) பீஜ மந்திர ஜபம் செய்து பூப்போட்டு பூஜிப்பது சிறப்பு.
 • ஜாதகதாரர் அனுஷ நக்ஷத்திரம் அதலால் மஹாபெரியவர் ஆசி உண்டு. அவரது அதிஷ்டானத்தை தரிசிப்பது சிறப்பான பலன்களைத் தரும்.
 • சனிக்கிழமை அன்று காலை 6-7 மணிக்குள் கருப்பு வஸ்திரம், கருப்புக்குடை, கருப்பு செருப்பு ஆகியவற்றுடன் ஒரு இரும்புச் சட்டியில் நல்லெண்ணை ஊற்றி அதில் இயன்றளவு காசுகள் போட்டு முகம் பார்த்தபிறகு மேற்கண்ட பொருட்களை ஏழை ஒருவருக்குத் தானம் தருவது சகல எதிர்மறைத் தாக்கங்களையும் முறியடிக்கும்.

2028ஆம் ஆண்டு வரை இவருக்கு ராஜயோகமான காலம் தான். இவராக போதும் என்று விலகினால் மட்டுமே பதவிக்கு மாற்று ஆள் தேடவேண்டும்.

– ஜாதகம் கணித்துப் பலன் சொன்னவர்:

அம்பாள் தாஸன் SA.ராமஸ்வாமி

(Visited 532 times, 1 visits today)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close