வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டிரம்ப் தமது ஓவல் அலுவலகத்தில் அளித்த பெட்டியில், காஷ்மீரில் உள்ள புல்வாமா தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா – பாக்., இடையே மிக மிக மோசமான சூழல் நிலவுவதாக தெரிவித்துள்ளார்.
” இந்தியா – பாக்., இடையே மிக மிக மோசமான சூழல் உள்ளது. மிக ஆபத்தான சூழலும் நிலவுகிறது. இது குறித்து இரு நாடுகளுடனும் பேசி வருகிறோம். இந்தப் போர்ச் சூழலை தடுத்து நிறுத்த விரும்புகிறோம். அதிக அளவிலான மக்கள் ஏற்கனவே கொல்லப்பட்டுள்ளனர். இதனை நிறுத்த வேண்டும். இதற்கான நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்” என்று மேலும் கூறினார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.
நாங்கள் வழக்கமாக 1.3 பில்லியன் டாலர்களை பாகிஸ்தானுக்கு செளுத்திவந்ததை நிறுத்தி விட்டோம். இதற்கிடையே நாங்கள் சந்தித்துப் பேசி வர நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மற்ற அதிபர்கள் இருந்த போது பல்வேறு நலன்களை பாகிஸ்தான் அனுபவித்து வந்தது. முன்பு வருடத்திற்கு 1.3 வில்லியன் டாலர்களை பாகிஸ்தானுக்கு கொடுத்து வந்தோம். நான் அதை நிறுத்தியதற்குக் காரணம், அவர்கள் எங்களுக்கு நாங்கள் எதிர்ப்பார்த்த விதத்தில் எங்களுக்கு உதவவில்லை. தற்போது சில மாதங்களாக எண்கள் உறவில் சில மேம்பாடுகளை எட்டியுள்ளோம் என்றார்.