1987 தேர்தலிலிருந்து தோற்காத நரேந்திர மோடி :அமித்ஷா

டெல்லியில் நடைபெற்று வரும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய ஆலோசனைக் கூட்டத்தில் அமித் ஷா பேசியதாவது:

1761ல் முகலாயப் படைகளிடம் நமது நாடு தோற்றதால், 200 ஆண்டுகள் ஆங்கிலேயரிடம் அடிமையாக இருக்க வேண்டிய சூழல் உருவானது. அதற்கு முன்பு வீர சிவாஜியின் ஆட்சியில், மராட்டியர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்த 131 போர்களில் வெற்றி கண்டனர்.

இதேபோல் தான் வரும் 2019 தேர்தல் நாட்டிற்கு மிக முக்கியமானது. இது கொள்கை ரீதியான போராட்டம். பாஜக மிகப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வரும். நமது பிரதமர் மோடி யாராலும் வெல்ல முடியாத போர் வீரன்.

இவர் கடந்த 1987ஆம் ஆண்டு முதல் நின்ற எந்தவொரு தேர்தலிலும் தோற்றதே இல்லை. எந்த கூட்டணியாலும் மோடியை வீழ்த்த முடியாது. உத்தரப்பிரதேசத்தில் மட்டும் பாஜக 50% ஓட்டுகள் பெறும்.

நரேந்திர மோடி 2001 லிருந்து-2014 வரை தொடர்ந்து குஜராத் முதல்வர் பொறுப்பிலும், 2014 முதல் இன்று வரை பாரதப் பிரதமர் பொறுப்பிலும் உள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது.

இது கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலை விட அதிக இடங்களை பாஜக கைப்பற்றும். எங்கள் கட்சி மீதுள்ள பயத்தின் காரணமாகவே, புதிய புதிய கூட்டணிகள் உருவாகி வருகின்றன என்று கூறினார்.

 

(Visited 25 times, 1 visits today)
1+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *