ஆயிரம் பேர் வேலை செய்யும் மென்பொருள் நகராகும் தென்காசி

இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப புரட்சி ஆரம்பித்த பின் நாடங்கும் கணினி சார்ந்த நிறுவனங்கள் அனைத்தும் நாட்டின் முக்கிய நகரங்களில் மட்டுமே தங்களது அலுவலகத்தை அமைத்து செயல்பட தொடங்கின.

பெங்களூரு ,சென்னை,மும்பை ,புனே ,ஹைதராபாத் போன்ற நகரங்களில் மட்டுமே இந்திய மற்றும் பன்னாட்டு மென்பொருள் மற்றும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களை கட்டமைத்து வேலை செய்கிறன .

இன்றை தேதியில் பெருமளவில் கணினி வல்லுநர்கள் மேற்கண்ட நகரங்களில் மட்டுமே வசிப்பதாக ஒரு புள்ளி விவர கணக்கு தெரிவிக்கிறது..

இந்த கணினி மற்றும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள்,போக்குவரத்து வசதிகள் மற்றும் நகரத்தின் பல்வேறு தனித்த வாழ்வியல் அம்ஸங்கள் முதலானவையோடு, இந்த நிறுவனங்களுக்கு தேவையான திறன் வாய்ந்த கணினி வல்லுனர்களும் நகரங்களிலேயே கிடைப்பதால் ,பொதுவாக நகரங்களில் மட்டுமே இந்த நிறுவனங்கள் செயல்படுகின்றன என்பது அனைவரும் அறிந்த உண்மை.

பின்பு, நகரங்களை விட்டுவிட்டு ,சிறு நகரங்களிலும் இந்த நிறுவனங்கள் தங்கள் அலுவலகத்தை அமைத்தன. தமிழகத்தில் கோவை மற்றும் மதுரையில் மென்பொருள் நிறுவனங்கள் தமிழக அரசின் டைடல் பூங்காக்களில் செல்லப்படுவதை நாம் அறிந்திருப்போம்.

ஆனால் தென் தமிழகத்தில் இருக்கும் சிறிய நகரான தென்காசியிலும் ஒரு மென்பொருள் நிறுவனம் செயல்படுகிறதை பெரும்பாலோனோர் அறிந்திருக்க மாட்டர்கள்.

சென்னையை அடுத்த கட்டங்களத்தூரில் மிகப்பெரிய அடுக்கு மாடி கட்டிடத்தில் இயங்கி வரும் மென்பொருள் நிறுவனம் ஸோஹோ கார்பொரேஷன். முன்பு அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த இந்த நிறுவனம் இப்போது சென்னையில் தனது தலைமை அலுவலகத்தை அமைத்து செயல்படுகிறது.

ஸ்ரீதர் வேம்பு என்பவரால் துவக்கப்பட்ட இந்த நிறுவனத்தில் இன்று 7000 பேர் பணிபுரிகிறார்கள்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தென்காசியில் அலுவலகத்தை அமைத்த ஸோஹோ ,அதன் பின் அங்கே தனது பணியாளர்கள் எண்ணிக்கையை 300 பேராக அதிகரித்தது.அடுத்த 18 மாதங்களில் சுமார் 1000 மென்பொருள் வல்லுநர்கள் பணிபுரியும் இடமாக தனது தென்காசி அலுவலகத்தை ஸோஹோ கட்டமைக்கப்போவதாய் இப்போது அறிவித்துள்ளது.

தென்காசியைப் போலவே இன்னொரு சிறு நகரமான ரேணிகுண்டாவிலும் ஸோஹோ நிறுவனத்தின் அலுவலகம் செயல்படுவது குறிப்பிடத்தக்கது.இந்த அலுவலகத்தின் பணியாளர் எண்ணிக்கையையும் 70 பேரிலிருந்து 300 பேராக மாற்ற வரும் காலங்களில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வளர்ச்சியடைந்த நரகரங்களுக்கே முன்னுரிமை அளிக்கும் மென்பொருள் நிறுவனங்களுக்கு இடையே சிறிய நகரங்களில் அலுவலகம் அமைத்து அந்த பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் ஸோஹோஒரு வித்தியாசமான நிறுவனம் என்பதில் சந்தேகம் இல்லை .

(Visited 291 times, 1 visits today)
4+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *