தினம் ஒரு குறள்
அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று.
யாருக்காகப் பரிந்து பேசப் போகிறோமோ அவர்பால் தமக்கிருக்கும் அன்பு, அவரைப் பற்றிய தெளிவார்ந்த அறிவு, அடுத்தவர் மாட்டு அவர் குறித்து திறம்பட எடுத்து வைக்கும் சொல்லாற்றல் இவை மூன்றும் தூது உரைப்பவர்க்கு இன்றியமையாத குணங்களாக இருக்க வேண்டும்.
முதல் பாடலில் தனிப்பட்ட குணநலன்களையும், இப்பாடலில் பொதுவான குணநலன்களையும் கூறி, இவ்விரண்டு பாட்டாலும் தூது உரைப்பவர் எக்குணத்தவராக இருக்க வேண்டும் என வரையறை செய்கிறார் வள்ளுவர்
(Visited 23 times, 1 visits today)