பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் மஹ்மூத் குரேஷி சிஎன்என் க்கு அளித்த பேட்டியில் ஜெய்ஸ் ஈ மஹ்மத் என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசார் , பாகிஸ்தானில் இருப்பதாக ஒத்துக்கொண்டார்.
சிஎன்என் நிருபர் கிறிஸ்டியன் அமான்போர், ஜெய்ஸ் ஈ மஹ்மத் என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசார் பாகிஸ்தானில்தான் இருக்கிறாரா என்ற கேள்வியை எழுப்பினார். அதற்குப் பதில் அளித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர், அவர் பாகிஸ்தானில் தான் இருக்கிறார் என்று பதில் அளித்துள்ளார்.
அவ்வாறானால் அவரை ஏன் கைது செய்யவில்லை என்ற கேள்வியை முன்வைத்தார் சிஎன் என் நிருபர். அதற்கு அவரது உடல் நிலை நலமாக இல்லை. மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளார். அவரால் வீட்டை விட்டுக்கூட வெளியே செல்ல இயலாத நிலையில் இருப்பதாகத் தான் எனக்குத் தகவல்கள் வந்துள்ளன.
அதனாலென்ன புல்வாமா தாக்குதலுக்கு அவரது அமைப்புதானே பொறுப்பேற்றுக் கொண்டது, உடல்நிலை சரியில்லா விட்டால் என்ன, கைது செய்ய வேண்டியதுதானே என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது.
👉Osama bin Laden was busted in Pak
👉Terrorist Hafiz Saeed openly gives speech in Pak
👉Pak Foreign Minister admits "Jaish-e-Mohammed #JeM chief Terrorist Masood Azhar is in Pakistan"Why all Terrorists find safe haven in Pak? #DeclarePakTerroristState
pic.twitter.com/sFRECP5QUm— Sir Jadeja fan (@SirJadeja) March 1, 2019
பாகிஸ்தானின் சுதந்திரமான நீதிமன்றம் ஆதாரங்களை இந்தியா கொடுத்தால் முறையாக விசாரிக்கும். மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் ஆதாராங்கள் இருந்தால்தானே கைது செய்ய முடியும் என்று பேட்டி அளித்துள்ளார்.