இந்தியாசிறப்புக் கட்டுரைகள்செய்திகள்

பாகிஸ்தான் தீவிரவாதம் – இது மோடியின் வித்தியாசமான அணுகுமுறை

26/11 என்று இப்போது அழைக்கப்படும் 2008 ஆம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பையில் நடத்திய தாக்குதலை, அன்றைய காங்கிரஸ் அரசு எதிர் கொண்ட விதமும் ,இன்றைய பாஜக அரசு பதிலடி கொடுத்த விதமும் எவ்வாறு மாறுபடுகிறது என்பதை இங்கே காணலாம் .

26 /11 தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று அன்றும் இந்திய விமான படை காங்கிரஸ் அரசிடம் கேட்டதாகவும், அதை அன்றைய மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு மறுத்து விட்டதாகவும் ஓய்வு பெற்ற விமானப்படை ஏர் சீப் மார்ஷல் பாலி ஹோமி மேஜர் சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.

 

அப்போதைய உள்துறை அமைச்சர் அமெரிக்காவுக்கு சென்று பாகிஸ்தான் தீவிரவாதிகள் மேலே எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று பேசி வந்ததோடு உருப்படியான ஒரு ராணுவ நடவடிக்கையும் பாகிஸ்தான் மேல் எடுக்கப்படவில்லை என்பதே உண்மை.

பாஜக ஆட்சியில் ஏற்கனவே நடந்த ஊரி தாக்குதலைப் பற்றி ஏற்கனவே பலமுறை, பல தகவல்கள் பேசப்பட்டுவிட்டதால் , இப்போது நடந்த பாலகோட் தாக்குதலை மட்டும் இங்கே அலசலாம் .

பாஜக அரசு ராணுவ நடவடிக்கையை அரசியலாக்குகிறதா என்றால் இல்லை என்றே நடந்தவைகளை தொடர்ந்து கவனித்து வரும் எவரும் புரிந்து கொள்ளலாம் .பிப்ரவரி 26 ஆம் நமது வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தி குறிப்பு ஜிகாதி தீவிரவாதம் எனும் வார்த்தை பலமுறை பயன்படுத்தியுள்ளது. இதுவரை இப்படி சொல்லப்பட்டது இல்லை.

 

அதுவும் பாகிஸ்தானிலே தாக்குதல் நடந்த பின்பும், முஸ்லீம் நாடுகளின் கூட்டமைப்பு இந்தியாவுக்கு அழைப்பு விடுத்த பின்பு,கொல்லப்பட்ட ஆட்களின் பெயரையும் ஜிஹாதிகள் என்றே வெளியுறவுத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. ஜிஹாதிகள், ஜிஹாதி தீவிரவாதம் என இந்திய அரசு சொல்வது இதுவே முதல்முறையாக இருக்கிறது.

இதை அமைச்சர்கள் யாரும் சொல்லவில்லை.வெளியுறவுத்துறை அமைச்சரோ பாதுகாப்பு அமைச்சரோ எவரும் பத்திரிகையாளர்களை சந்திக்கவில்லை . எல்லாமே அதிகாரிகளாலேயே முன்னெடுக்கப்பட்டன. ராணுவ தளபதிகளே பேட்டியளித்தார்கள்.

நமது பிரதமர் மோடி அவருடைய அன்றாட பணிகளை தொடர்ந்து செய்தார், நாட்டிலும் எல்லா இடங்களிலும் வழக்கம்போல பணிகள் நடந்தன.

ஆனால் பாகிஸ்தான்? தன்னுடைய வான்வெளியை நான்கு நாட்கள் மூடியது. உள்நாட்டு விமானப்போக்குவரத்தை இன்னமும் 4 ம் தேதி வரை நிறுத்தி வைத்திருக்கிறது. குறிப்பிட்ட அளவு விமானங்களே இப்போதும் அனுமதிக்கப்படுகிறன.

இது என்ன? சும்மா நாலு இடத்தை தாக்கினால் போதுமா என கேட்கலாம். இன்னமும் எப்படித் தாக்கினார்கள் என்பதை நமது விமானப்படை சொல்லவில்லை. எவ்வளவு சேதாரம் ஏற்பட்டது என்பதையும் சொல்லவில்லை. நம்மிடம் இருக்கும் செய்ற்கைகோள்கள் பாகிஸ்தானின் 87 சதம் நிலப்பரப்பை 24 மணி நேரமும் கண்காணிக்கின்றன. அப்படியானால் சொல்லமுடியும் அல்லவா?.

சொல்லமுடியும், ஆனால் அதை பாகிஸ்தானிலே இருந்தே வெளி வரட்டும் என இருக்கிறார்கள். நடந்திருக்கும் சேதம் அப்படி! ஜிஹாதி தீவிரவாதிகளுக்கு ஏற்பட்ட இழப்பை பாகிஸ்தான் மேலேயே காட்டுவார்கள் அல்லது பகிரங்கமாக அறிவிப்பார்கள் என நமது படைகள் எதிர்பார்த்தன. எதிர்பார்த்தது போல நேற்று முன்தினம் ஜெய்ஷ் இ முகமது (முகமதுவின் ராணுவம்) தீவிரவாத அமைப்பின் தீவிரவாதி ஒருவன் பேசியியுள்ளான், பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது திருப்பி தாக்குவோம் என.இன்று தாக்குதல் நடந்து பல தீவிவாதிகள் கொல்லப்பட்டிருப்பதை பல வெளிநாட்டு உளவு நிறுவனங்களே உறுதி செய்துள்ளதை நாம் செய்திகளில் படிக்கலாம் .

எப் ஏ டி எப் எனும் பைனாசியல் ஆக்சன் டாஸ்க் போர்ஸ் பாக்கிகளை தீவிரவாதிகளுக்கு பணம் கொடுக்கும் நாடு என இரண்டாம் நிலை தடை விதித்தது (கிரே லிஸ்ட்) போன வருடம். இந்த வருடமோ அதை மாற்ற முடியாது. இன்னும் தீவிரவாதிகளை தடை செய்யாவிடில் முதல்நிலை தடை விதிப்போம் என சொல்லியிருக்கிறது. நம் முயற்சிக்கு கிடைத்த வெற்றி இது.

ஐரோப்பா பாகிஸ்தான் கறுப்புப் பண சலவை செய்யும் நாடாகக் கருதித் தடை விதித்திருக்கிறது. இந்த இரண்டும் பாகிஸ்தானுக்கு பணம் வருவதற்கும் , செலவழிப்பதற்கும் கடும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளன. கடந்த ஐந்து வருடங்களிலே மட்டும் பாக்கி ருபாய் மதிப்பு 50 சதம் குறைந்திருக்கிறது. ஒரு டாலர் 90 ரூபாய் என இருந்தது. இப்போது ஒரு டாலர் 150 ரூபாய் என வந்து நிற்கீறது.

இந்த சிக்கலிலே தான் நம்மின் மீது ஒரு தாக்குதலை நடத்தி அதன் மூலம் சர்வதேச நாடுகளின் கவனத்தை திருப்பி, திரும்பவும் காஷ்மீர் பிரச்சினையை வைத்து நம்மோடு பேச்சுவார்த்தை நடத்தலாம். இதற்கு முன்னரும் பல வழிகளிலே நம்மோடு பேச்சுவார்த்தை நடத்தலாம் என ஆசை காட்டி பார்த்தது.

முதலிலே சீனா பாகிஸ்தான் பொருளாதார வழித் திட்டத்திலே இந்தியாவும் சேரலாம். வணிகம் பெருகும்  என சொல்லியது. பதிலுக்கு மோடி அரசோ எங்களுக்கு இரண்டு பக்கம் கடல் இருக்கு, அதன் மூலமாக  தற்போது  சீனாவுடன்  வணிகம் செய்துகொண்டு தான் இருக்கிறோம். பக்கத்து நாடான மியான்மார் வழியாக சீனாவுக்கு எளிதிலே போகமுடியும். தரைவழியும் இப்போது உள்ளது. ஈரான் வழியாக  நாங்க நேராகவே ஐரோப்பாவுக்கு வணிகம் செய்வோம். உங்கூட எல்லம் கூட்டு சேரமுடியாதுனு சொல்லிவிட்டது.

அடுத்து இந்த கர்டாபூர் இணைப்பு பாதை. சீக்கியர்களின் புனிதத் தலத்திற்கு இணைப்பு ரயில் பாதை விடுவதன் மூலம் நம்மோடு பேச்சுவார்த்தை நடத்தலாம் என நினைத்தது. மோடி அதுக்கும் நிதி  கொடுக்க முடியாது என்று அறிவித்து விட்டார்.

அதற்கப்புறம்புறம் உலக வங்கி, அமெரிக்கா எல்லாம் வைச்சு இந்தியாவுடன் வணிக உறவுகளை மேம்படுத்தவேண்டும் என கெஞ்சி பார்த்தது. அப்போ தான் இந்த இரண்டு பேரும் சேர்ந்து வறுமையை ஒழிப்போம், கிழிப்போம் என இப்போ நம்மூர் தேசதுரோகிகளுக்கு ஆதர்சமாக தெரியும் . அதுக்கும் மோடி அசைந்து கொடுக்கவில்லை.

அப்படியா சரி இரு ஒரு பெரிய தீவிரவாத தாக்குதலை நடத்தி எப்படி வழிக்குக் கொண்டு வர்றேன் எனத் திட்டம் போட்டு தாக்கியது. அப்போது என்ன எப்படியும் தரை வழியாகத் தான் இந்தியா திரும்பவும் தாக்கும் . ஒரு சர்ஜிகல் ஸ்டிரைக் நடக்கும் .அதற்கும் தயாரா இருக்கலாம் என பாகிஸ்தான் நினைத்தது

எப்படி நோய் வந்தால் மருத்துவரிடம் போகிறோமோ, சட்டச் சிக்கல் என்றால் வழக்குரைஞரிடம் போகிறோமோ அதே போல் சட்டம் ஒழுங்கிற்குக் காவல்துறை அதிகாரிகளிடமும், நாட்டின் பாதுகாப்புக்கு ராணுவத் தளபதிகளிடம் தானே ஆலோசிக்க முடியும்?

எனவே நமது விமானப்படை தலைமை தளபதி தந்த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கினார் பிரதமர் மோடி . தாக்குதல் நடந்தது.

இந்த இடத்திலே மிராஜ் 2000, மிக் 21, சுகோய் 30 என நம்மிடம் இருக்கும் விமானங்களின் வேகம் பார்க்கவேண்டும். அவை மணிக்கு 2100 இல் இருந்து 2300 கிலோமீட்டர் வரை போகக்கூடியவை. இது ஒலியின் வேகத்தை போல 1.5 மடங்கு. அதாவது விமானம் பறப்பதன் மூலம் ஏற்படும் ஒலி பயனிக்கும் வேகத்தை விட அதிக வேகத்திலே விமானம் பறந்து சென்று விடும்.

ஒப்பீட்டுக்கு சென்னை கன்யாகுமரி தொலைவான 700 கிலோ மீட்டரை இந்த விமானம் 18 நிமிடங்களிலே கடந்துவிடும். எல்லைக் கோட்டை தாண்டிப் போகவேண்டியது வெறும் 180 கிலோமிட்டர் மட்டுமே. 5 நிமிடங்களிலே மொத்தவேலையும் முடிந்துவிட்டது.

ஆனால் பாகிஸ்தானும் திருப்பி விமானப்படையை அனுப்பியதே . நாம் எப்படி கண்டுபிடித்தோம்? நம்மை எப்படி கண்டுபிடிக்கமுடியவில்லை என கேட்டால், நம்மிடம் இருப்பது போல ரேடார் கருவிகள் அவர்களிடம் இல்லை. அதனால் தான் ஒட்டுமொத்த வான்வெளி பயண தடங்களையே மூடவேண்டியிருந்தது.

நம்மிடம் இருக்கும் கருவிகள் கொண்டு 24 மணி நேரமும் கண்காணிக்கலாம் . ஆனால் பாகிஸ்தானால் எது பயணிகள் விமானம், எது போர்விமானம் என்றெல்லாம் பிரித்தறியமுடியாது. ஏற்கனவே அவர்களின் போர்விமானத்தை அவர்களே சமீபத்தில் சுட்டு வீழ்த்தியதை பார்த்திருப்பீர்கள்.

அரதப்பழசான மிக் 21 இல் இருந்த வீரர் அபிநந்தன் பாக்கிகளின் விமானத்தை துரத்தி சென்றிருக்கிறார். ஒரு விமானம் ரேடாரிலே சிக்கியிருக்கிறது. உடனே ஏவுகணை கொண்டு தாக்கியிருக்கிறார். அந்த எப் 16 ரக விமானம் வீழ்ந்தது. இந்த இடத்திலே இரண்டு கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. ஒன்று நம் விமானம் தொழில்நுட்ப கோளாறுகளால் வீழ்ந்தது. இன்னோன்று பாக்கி ஏவுகணை தாக்கியது என. உண்மை சில நாட்களிலே தெரியவரும்.

இதிலே இந்த எப் 16 ரக விமானம் அமெரிக்க கொடுத்தது. கொடுக்கும்போதே நமது ராணுவம் எச்சரித்தது. பெனாசிர் பூட்டொ இருக்கும்போதே வாங்க முயற்சித்து பின்னர் ஒரு வழியாய் தீவிரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்துவோம் என சொல்லி வாங்கியது. இதிலே சில ஒருவர் மட்டும் இயக்கும் விமானம். பலது இருவரும் இயக்கும் விமானம்.

இருவர் இயக்கும் விமானத்திலே ஒருவர் விமானத்தை இயக்கவும் , இன்னோருவர் எதிரி விமானத்தைத் தாக்குதலை  நடத்தமுடியும். ஒருவர் மட்டும் இருக்கும் விமானம் என்றால் இரண்டையுமே ஒருவர் செய்யவேண்டும்.அபிநந்தனின் திறமை எப்படிபட்டது என்றால் இருவர் இயக்கிய விமானத்தை இவர் ஒருவராக சுட்டு வீழ்த்தியிருக்கிறார்.

அடுத்து நடந்தது தான் மோடியின் அரசியல் தலைமைக்கு எடுத்துக்காட்டு. ஒரு தலைவர் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு.

வீரர் பிடிபட்டார் என்ற செய்தி வந்ததவுடனே என்ன செய்யலாம் எனத் திட்டம் தயாரிக்க ராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டது. கப்பல் படை முழு பலத்தோடு அரபிக்கடல் எல்லை நோக்கி நகருமாறும் ,அவர்களின் முக்கியத் துறைமுகமாக கராச்சியின் மீது முற்றுகை இடுமாறும் உத்தரவிடப்பட்டது.

மோடி சேவு பாகிஸ்தான், சேவு அபிநந்தன் என கூவுபவர்களைக்  கண்டுகொள்ளவில்லை. பாகிஸ்தானிலே இருந்து வந்த அழைப்புக்களை எடுக்கவில்லை. பயணக்கைதியாக வைத்து மிரட்டும் வேலை எல்லாம் நடக்காது. தாக்குதல் நடத்தி மீட்போம் என்பது அமெரிக்காவிடமும் சீனாவிடமும் சொல்லப்பட்டது. அமெரிக்க வெளியுறவு துறை செயலாளர் நம்மின் அமைச்சர்கள் யாரிடமும் பேசவில்லை. அஜித் தோவலிடம் மட்டும் பேசினார். ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் பேச மோடி ஒத்துக்கொள்ளவில்லை. ரஷ்ய அதிபர் புதின் மோடியுடன் பேசினார்.

எல்லா நாடுகளும் இந்தியாவுக்கு தற்காப்பு தாக்குதல் நடத்த உரிமை இருக்கிறது எனவும், பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஒழிக்கவேண்டும் எனவும் சொல்ல பாக்கிகளுக்கு வேறு வழியின்றி போயிற்று.

பாகிஸ்தான் பத்திரிக்கைகளோ எப் -16 விமானம் விழுந்ததையோ அல்லது இரண்டு விமானங்கள் விழுந்தன என்றால் ஒரு விமானமும் விமானியும் இங்கிருக்கிறார் இன்னோருவர் எங்கே என்ற கேள்வியை கேட்கவே இல்லை.

சுஷ்மா சுவராஜ் இந்த பிரச்சினை நடக்கும்போதே இரண்டு உலக மாநாடுகளுக்கு போயிருக்கிறார். ஒன்று இந்தியா-ரஷ்யா-சீனா வெளியுறவு அமைச்சர்களின் மாநாடு சீனா வுவான் நகரிலே நடந்தது. இன்னோன்று இஸ்லாமிய கூட்டமைப்புகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாடு அபுதாபியிலே நடந்தது. அதிலே மரியாதைக்குரிய விருந்தினராக கலந்துகொண்டார். இரண்டிலும் இந்தியாவை அமைதியாக இருக்கச் சொல்லி எந்த நாடும் கேட்கவில்லை. பிராந்தியத்திலே அமைதி திரும்பினால் நல்லது என்று தான் சொன்னார்கள்.

இஸ்லாமிய கூட்டமைப்பு மாநாட்டிலேயே நமது அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தீவிரவாதத்தை கண்டித்தார். உலக அளவிலான பிரச்சினை என்றார். இது இப்படி இருக்க காஷ்மீரிலே தீவிரவாதிகளின் வேட்டை தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. எல்லையிலே பீரங்கி தாக்குதல் நடந்து கொண்டே இருக்கறது.

நம்முடைய பொருளாதாரத்திற்கோ போக்குவரத்திற்கோ எந்த பாதிப்பும் இல்லை. எல்லாம் அது அது போக்கிலே இயங்கின. மோடி அவரின் அன்றாட நிகழ்வுகளை கவனித்தார். நம்மூருக்கு வந்து மாநாட்டிலே பேசிவிட்டு போனார்.

ஆனால் அந்தப்பக்கமோ இரண்டு நாட்களுக்கு பல நகரங்களை இருளிலே மூழ்கடித்து வைத்திருந்தார்கள். நான்கு நாட்களுக்கு விமானப்போக்குவரத்தே சுத்தமாக இல்லை. பணவீக்கம் ஐந்து வருடங்களிலே அதிகளவாக இருக்கிறது.

 

இதை ஏன் என புரிந்துகொள்ளவேண்டும்.

பாகிஸ்தான் ஒரு பைத்தியக்கார நாடு. அவர்களை பொறுத்தவரை முன்னேற்றம், கண்டுபிடிப்பு, வியாபாரம் என்பதெல்லாம் விஷயமே அல்ல.

இந்தியாவை இந்துக்களை அழித்தொழிக்கவேண்டும் என்பது மட்டுமே ஒரே எண்ணம். எனவே என்னதான் பேச்சுவார்த்தை கீச்சுவார்த்தை நடத்தினாலும் ஒன்னும் ஆகப்போவதில்லை. இது இங்கிருப்பவர்களுக்கு புரியவில்லை என்றால் புரியும் போது  புரியும். ஆனால் இந்துக்கள் அடிமையாக இருக்கட்டுமே ? இருந்தால் என்ன ? என சொல்லும் ஆட்கள் தான் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என சொல்கிறார்கள் .

உலக அளவிலேயும் முன்பு அப்படி சொல்லிக்கொண்டு இருந்தார்கள் . முக்கியமாக இடதுசாரி பத்திரிக்கைகள்.

பாகிஸ்தான் ஒரு மத அடிப்படைவாத நாடு. எனவே மத அடிப்படைவாதிகளை, தீவிரவாதிகளை, பயங்கரவாதிகளை  அனுசரித்தும், அரவணைத்தும் போகவேன்டிய கட்டாயம் இருக்கிறது என்றே சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள் .

முன்பு இருந்த காங்கிரஸ் அரசுகள் அதைக்கேட்டுக்கொண்டு இருந்தன. மோடி கேட்க மாட்டேன் என்கிறார். அது தான் அவரின் மீது இவ்வளவு வெறுப்பை உமிழ காரணம். கவனிங்க. இந்துக்களுக்கு உரிமைகிடையாது; இந்துக்கள் மதத்தைப் பரப்பக் கூடாது; ஆனால் பாகிஸ்தான் ஜிஹாதிகளை அனுப்பலாம்; மதவாதம் செய்யலாம் என  சொல்லும் ஆட்கள் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என சொல்லுகிறார்கள்.

எவ்வளவு நாளாக என்னவென்று பேச்சுவார்த்தை நடத்துவது? மோடி தெளிவாக சொல்லிவிட்டார்.

இந்தியாவிலே தீவிரவாதத் தாக்குதல் நடந்தால் பாகிஸ்தானிலே நேரடித் தாக்குதல் இருக்கும். பாக்கிஸ்தான் திவால் ஆகிவிடும் என. இதனால் தீவிரவாத தாக்குதல் நிற்குமா? சொல்லமுடியாது.

மோடி இன்னோர் முறை வென்று விடக்கூடாது என ஏதேனும் படு பயங்கரமான தாக்குதலை நடத்தலாம்.அல்லது இதனால் மோடிக்குத்தான் நல்ல பெயர் என பேசாமல் இருக்கலாம். ஆனால் பாகிஸ்தானைப் பொறுத்தவரை அப்படி இருப்பதே தோல்வி என்று தான் நினைக்கும். அது இப்போது பெரும் சிக்கலுக்கு கொண்டு போய் விட்டிருக்கிறது. தாக்குதல் நடத்தினாலோ மோடி பதிலுக்கு தாக்குவார். மக்களூக்கு மோடியின் உறுதி புரியும்.
தாக்குதல் நடத்தாவிட்டாலோ தீவிரவாதத்தை மோடி ஒடுக்கிவிட்டார் என மக்கள் திரும்பவும் தேர்ந்தெடுப்பார்கள்.

(Visited 668 times, 1 visits today)
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close