நாம் கொண்டாடப்படவேண்டிய இம்ரான் கான்
பாகிஸ்தான் ஒரு அடிப்படைவாத இஸ்லாமிய நாடு. முழுக்க முழுக்க ராணுவத்தின் கட்டளைப்படி ஆட்சி அடக்கும் நாடு.அங்கே வாழும் சிறுபான்மை மக்களான இந்துக்கள்,கிறிஸ்தவர்கள்,அகமதியாக்கள் மற்றும் தனி நாடு கேட்டு போராடும் பலோச் மக்கள் என அனைவரையும் கடுமையாக அடக்கி ,வேண்டாத குடிமக்களாக நடத்தும் ஒரு ஆட்சி அங்கே எப்போதுமே நடைபெறுகிறது.
பாகிஸ்தானின் இந்த உண்மை முகம் தெரிந்தும் ,இங்கே இப்போது பலர் பாகிஸ்தான் பிரதமரை அமைதி புறா என்றும், நல்லவர் என்றும் ,அபிநந்தனை விடுவித்ததன் மூலம் அவர் நோபல் பரிசுக்கே தகுதியானவர் என்றும் பாராட்டு பத்திரம் வாசிப்பதை படிக்கும்போது நொந்து போவதை தவிர வேறு ஒன்றும் தோன்றவில்லை.
பாகிஸ்தான் பிரதமர் அங்கே ஒரு பொம்மை என்றும், அவரே முந்தைய காலங்களில் ஒசாமா பின்லேடனை சந்தித்து தீவிரவாத செயல்களுக்கு ஆதரவு அளித்தவர் என்ற உண்மையை இங்கே பலர் வசதியாக மறந்து கொண்டிருக்கிறார்கள்.
நாம் பாராட்ட வேண்டியவர் பாகிஸ்தான் இம்ரான் கான் இல்லை.
நம்முடைய இம்ரான் கானை இங்கே பலருக்கும் தெரித்தே இருக்காது.நம் இம்ரான் கான் ராஜஸ்தான் மாநிலத்தின் ஆள்வார் நகரத்தில் வசிக்கும் ஆசிரியர் . 2015 ஆம் ஆண்டு ,பிரதமர் மோடி இங்கிலாந்து நாட்டின் வெம்பிளி நகரில் பேசிய உரையில் மூலம் ,நம்முடைய இம்ரான் கானை இந்திய மக்களுக்கே அறிய செய்தார்.
யார் இந்த ஆசிரியர் இம்ரான் கான் ?
ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ஆழ்வார் நகரில் இருக்கும் ராஜ்கியா சம்ஸ்கிருத அரசு பள்ளியில் கணித ஆசிரியரான இம்ரான் இதுவரை சுமார் 80 கைபேசி செயலிகளை நாட்டுக்காக இலவசமாக வழங்கி உள்ளார்.இவரது செயலிகள் அனைத்தும் பள்ளி கல்விக்கானவை .
இதுவரை இவரது செயலிகளை சுமார் 1.5 கோடி மக்கள் தரவிறக்கம் செய்து பயன்படுத்துகின்றனர் .
2012 ஆம் ஆண்டில் இருந்தே கல்விக்கான கைபேசி செயலிகளை அறிமுகம் செய்து ,அனைத்து செயலிகளையும் தனது மாநில அரசின் பள்ளி கல்வி துறைக்கே இலவசமாக வழங்கிய இம்ரானுக்கு ராஜஸ்தான் மாநில அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பாமாஷா என்கிற விருதினை வழங்கி கவரவித்தது . இவர் இலவசமாக வழங்கிய அனைத்து செயலிகளின் மொத்த மதிப்பு சுமார் 3.22 கோடி ரூபாய் என்று ராஜஸ்தான் மாநில அரசு கணக்கிட்டுள்ளது .
மாநில அரசு இவரது சேவையை பாராட்டி திஷாரி என்னும் போட்டி தேர்வுகளுக்கான செயலியை உருவாக்கும் பணியை கொடுத்தது.அதையும் வெற்றிகரமாக முடித்தவர் நமது இம்ரான் .
இன்று ராஜஸ்தான் மாநிலத்தின்உயர் கல்வித்துறையில் சிறப்பு பணியில் செயலாற்றும் இம்ரான் ,2015 ஆம் ஆண்டு பிரதமர் மோடி தன்னை குறிப்பிட்டு பேசிய பின்னே தனக்கான அங்கீகாரம் கிடைக்க துவங்கியதாக பெருமிதம் கொள்கிறார்.
Sharing the story of a hero of Digital India- Imran Khan who has introduced various educational apps to help students. #DigitalIndia pic.twitter.com/kTott0Wzwm
— Ravi Shankar Prasad (@rsprasad) May 14, 2017
இன்று பூடான் போன்ற நாடுகளின் பள்ளி கல்வித்துறையின் கணினி வழி கல்விக்காக தனது சேவையை தொடர்ந்து செய்யும் இம்ரான் , கல்விக்காக தனது வாழ்வையே அர்பணித்துக்கொண்டிருப்பவர் .
கடந்த 2018 ஆம் ஆண்டு இவருக்கு மத்திய அரசின் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது .
இவரே நமது நன்றிக்குரியவர் . இந்த இம்ரானையே இந்தியர்கள்அறிந்து இருக்க வேண்டும்
இவரை தெரிந்து கொள்ளாமல் ,பாகிஸ்தானின் அண்டை நாடான ஆப்கானித்தான் மற்றும் ஈரான் போன்ற நாடுகளால் தலிபான் கான் என்று அழைக்கப்படும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானைப் பற்றிய உண்மையை அறியாமல் அவரை பெருமைபடுத்தும் நம் நாட்டு மக்களை கண்டு நாம் நொந்து கொள்ளத்தான் வேண்டும்