
பாகிஸ்தானில் இந்திய விமான படை தாக்குதல் நடத்தியதற்கு ஆதாரங்கள் வேண்டும் என இந்திய எதிர்க்கட்சிகள் கேட்டுக்கொண்டிருந்த நிலையில், இன்று இந்திய விமான படையின் தளபதி பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
விமான படை தளபதி ஏர் மார்ஷல் பி.எஸ். தானோவா “ நாங்கள் இலக்கை தாக்க திட்டமிட்டதால், நாங்கள் இலக்கை தாங்கினோம் .நாங்கள் இலக்கை தாக்காவிட்டால் ஏன் பாகிஸ்தான் நம் நாட்டில் வந்து திருப்பி தாக்கியது; நாங்கள் காட்டில் தான் குண்டுகளை போட்டிருந்தால் அவர்கள் ஏன் பதில் தாக்குதல் நடத்தினார்கள் “என்று கேள்வி எழுப்பினார் .
மேலும் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை பற்றி தங்களுக்கு தெரியாது என்றும் கூறினார்.
மேலும் அவர் ” தாக்குதல் தொடர்ந்து நடக்கும் ” என்றும் முக்கியமாக குறிப்பிட்டார் .ஏற்கனவே பிரதமர் மோடி பாதுகாப்பு படைகளுக்கு முழு சுதந்திரம் அளித்துவிட்டதாக குறிப்பிட்டு பேசியது கவனிக்கத்தக்கது.
(Visited 36 times, 1 visits today)