தினகரனின் அமமுகவில் எஸ்.டி.பி.ஐ க்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. மற்றொரு கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடக்கிறது என தினரகரன் தெரிவித்தார். குறிப்பாக தென் மாவட்டங்களில் அதிகக் கவனம் செலுத்தும் தினகரன் குறிப்பாக முக்குலத்தோர் சமூக வாக்குகளைக் குறிவைத்து அரசியல் செய்கிறார். அதில் ஓரளவுக்கு அவருக்கு வெற்றியும் கிடைத்துள்ளது.
தென் மாவட்ட மற்றும் மத்திய தமிழகத்தில் சில பகுதிகளில் தங்களது சாதியைச் சேர்ந்த மக்களின் துணையோடு அமமுகவின் கொடியைப்பார்க்க முடிகிறது. தற்போது சிறுபான்மை கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. அதன் படிதான் எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. மனித நேய மக்கள் கட்சிக்கு திமுகவில் இடம் ஒதுக்கப்படாததால், தினகரனோடு சேரலாமா என்று சிந்தித்து வருகிறது.
அவ்வாறு அமைந்தால் அமமுக 38 தொகுதிகளிலும், மற்ற கூட்டணிக்கட்சிகளுக்கு 2 இடங்களும் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.