பிரதமர் மோடி தான் எங்களுக்கு டாடி – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

 அதிமுகவின் தலைவர்களில் ஒருவரும்,  தமிழக பால்வளத்துறை அமைச்சருமான  ராஜேந்திர பாலாஜி, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார்.

அம்மா இல்லாத எங்களுக்கு பிரதமர் மோடிதான் தற்போது ‘டாடி’யாக இருந்து வழிநடத்துகிறார் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் எல்லோரும் பாதுகாப்பாக உள்ளனர். அதேபோல், பிரதமர் மோடியின் ஆட்சியில் இந்திய அளவில் எல்லோரும் பாதுகாப்புடன் இருக்கிறார்கள்.

ஜெயலலிதா எனும் ஆளுமை கொண்ட அம்மா இல்லாமல் நாங்கள் தவித்து வருகிற இந்த நேரத்தில், பிரதமர் மோடிதான் எங்களுக்கு ‘டாடி’யாக இருந்து வழிகாட்டுகிறார்.

இந்தியாவை மோடியே மீண்டும் ஆள வேண்டும். அதேபோல், தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி தொடரவேண்டும்.

கடந்த வருடம் ராஜேந்திர பாலாஜி, உங்கள் ஆட்சி கவிழுமா என்று கேட்டதற்கு “அதெல்லாம் மேலுள்ளவர் பார்த்துக் கொள்வார், என்று மோடியை நேரடியாகக் குறிப்பிட்டு பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

(Visited 12 times, 1 visits today)
0

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *