மேகதாது அணைகட்ட அனுமதித்தது போல தமிழக கட்சிகள் சொன்னது பொய்யா? சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு எழுத்துப் பூர்வமாக மறுப்பு

டெல்லி: தமிழக அரசு, மேகதாது அணையைக் கட்ட கர்நாடகாவிற்கு  அனுமதி  அளித்துள்ளது எனச் சொல்லி சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசின் அனுமதிக்கு தடை விதிக்க வலியுறுத்தியும் கர்நாடக அரசுக்கு எதிராகவும் அவமதிப்பு வழக்கு தொடர்ந்து உள்ளது.

மேகதாதுவில் அணை கட்டுவதற்கான வரைவு அறிக்கையைத் தயாரிக்க மட்டுமே கர்நாடகாவிற்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி வழங்கியது என்பதை சுப்ரீம் கோர்ட்டில் உறுதி செய்துள்ளது மத்திய அரசு.

இந்நிலையில் தமிழகத்தின் இந்த மனுவுக்கு மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: அதில், மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பான திட்ட ஆய்வறிக்கை தயாரிக்க மட்டுமே அனுமதி அளித்து உள்ளோம். இந்த அனுமதி என்பது அணை கட்டுவதற்குக் கொடுத்த அனுமதி கிடையாது. எனவே, இது சுப்ரீம் கோர்ட் தீர்ப்பிற்கு எதிரானது அல்ல. தீர்ப்பை அவமதிக்கும் செயலும் அல்ல.

 

ஆய்வறிக்கை தாக்கல் செய்த பின்னர், மத்திய நீர் ஆணையத்தின் நிபுணர்கள் சம்பந்தப்பட்ட அனைத்து விவரங்களையும் ஆராய்ந்து பார்த்த பின்னரே, அந்த அணை தேவைதானா என்பதை ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும்.

மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் ஆலோசனை குழுவுக்கு இறுதியாக அனுப்பப்படும். இதன் பின் மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் திட்டத்தை, காவிரி நீர்மேலாண்மை ஆணையத்தின் பரிசீலனைக்கு அனுப்பும்.

ஆகவே இப்போது அளிக்கப்பட்டு உள்ள விரிவான திட்ட அறிக்கைக்கு தானே ஒழிய  அணை கட்டுவதற்கான அனுமதி அல்ல. மேகதாது அணை விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மாநிலங்களுடன் ஆலோசனை நடத்தப்படும். தமிழகத்தின் அனுமதி இல்லாமல் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட மாட்டாது.

தமிழக  கட்சிகள் பதறியது போல அணைக்கட்ட அனுமதி இல்லை என்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.

(Visited 45 times, 1 visits today)
6+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *