அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்.
அறிவுடையோர் சொல்லை அழித்துத் தானும் அறியாதவனாய் இருப்பினும், உறுதி தரும் சொற்களை ஆள்பவர்க்குக் கூறுவது, உடனிருக்கும் அமைச்சனது கடமையாகும்.
இடிக்க, இடிக்கக் கல்லும் கரையும் என்பதுபோல், அறிவைப் புகட்டப் புகட்ட, நிச்சயம். ஒருநாள் மாற்றம் நிகழும் என்ற உறுதிப்பாட்டுடன் ஆலோசனை கூற வல்லானை அமைச்சனாக மட்டுமல்ல, நண்பனாகப் பெற்றாலே வரம்தான்.
(Visited 25 times, 1 visits today)