பாமக தருமபுரி, விழுப்புரம், அரக்கோணம், கடலூர், மத்திய சென்னை, திண்டுக்கல் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் விழுப்புரம் ஆகிய7 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் விழுப்புரம் தவிர ஏனைய ஆறு தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்களும் பாமக வேட்பாளர்களும் நேருக்கு நேர் மோதுகின்றனர். விழுப்புரம் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட்டாலும், அக்கட்சியின் வேட்பாளர் ரவிக்குமார் உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிடுகிறார். இதனால் பாமகவின் ஏழு தொகுதிகளிலும் உதயசூரியனை எதிர்த்தே பாமகவின் மாம்பழம் போட்டியிடுகின்றது .
இதில் குறிப்பாக அரக்கோணத்தில் இரு தரப்பிலும் முக்கிய புள்ளிகள் போட்டி இடுகின்றனர். திமுக சார்பில் ஜெகத் ரட்சகனும், பாமக சார்பில் முன்னாள் அமைச்சர் ஏ.கே.மூர்த்தியும் போட்டி இடுகின்றனர். இதனால் போட்டி பலமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.