சிறுமியின் கேள்விக்குப் பதில் அளிக்க இயலாமல் திணறிய ராகுல்காந்தி

நாள் பயணமாக துபாய் சென்றுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார். தனது உரைக்குப் பின்னர் பதில் அளிக்கத் தயாராக இருப்பதாக சொன்ன ராகுலிடம் 14 வயது சிறுமி எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளிக்க இயலாமல் சமாளித்தார். ஒரு கட்டத்தில் காங்கிரசின் தொழில்நுட்ப அணி நேரடி ஒளிபரப்பையே நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு வந்தது.

சிறுமி கேள்வி: இந்தியாவில் மதவாதம் அதிகரித்துவிட்டதாகக் கூறும் நீங்கள் ஏன் குஜராத் தேர்தலின் போது பட்டை அணிந்து கோவிலுக்கு சென்று வந்தீர்கள்? அதுவே காஷ்மீர் சென்றால்  குல்லா அணிந்து கொள்கிறீர்கள் ஏன்? என்று கேட்க ஒரு நிமிடம் ராகுல் காந்தி ஆடி போய்விட்டார்.

 

சமத்துவம் பேண என்று ஒருவாறாக சமாளித்த ராகுலிடம் அடுத்த கேள்விக்குப் பதில் அளிக்க முடியாமல் சிரித்துக் கொண்டே தடுமாற, நிகழ்ச்சி நேரலை ஒளிபரப்பைத் தடைசெய்தனர்.

 

கேள்வி:  கடந்த கால ஆட்சியில் 80 % ஆண்டுகள் காங்கிரஸ்தானே ஆட்சிப் பொறுப்பில் இருந்தது.  ஆனால் அந்த நாட்களில் செய்யாத நன்மையையும் வளர்ச்சியையுமா நீங்கள் இனிமேல் செய்ய போகிறீர்கள் என்றுகேட்க அவ்வளவுதான் ராகுல் காந்தியின் முகம் மாறிவிட்டது அவரால் என்ன செய்வது என்று தெரியாமல் சிரித்த படியே இருந்தார்.

இந்தியாவில் மோடி ஆட்சிக்கு வந்த பிறகுதான், வெளிநாட்டில் வசிக்கும் மக்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைத்திருப்பதாகவும்,  எனவே  தாங்களும் தங்கள் நண்பர்களும் மதவாதம் பற்றி பேசாமல்  ஊழல் இல்லாத ஆட்சியை இனிமேலாவது தருவோம் என்று வாக்கு கேளுங்கள். இந்திய மக்கள் சிந்திப்பார்கள் என்று தெரிவிக்க அரங்கில் கை தட்டல் ஒழிக்க ஆரம்பித்தது.

(Visited 115 times, 1 visits today)
3+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *