கும்பிடத் தோன்றும்-கூப்பிடத் தோன்றும்: நயன்தாரா குறித்த சர்ச்சை பேச்சு – திமுகவில் இருந்து ராதாரவிக்கு கல்தா

சமீபத்தில் நடந்த ஒரு திரைப்பபட விழாவில் நடிகர் ராதாரவி நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார்.

ஐரா என்ற திரைப்படத்தின் விழா ஒன்றில் பேசிய ராதாரவி நயன்தாரா இத்தனை ஆண்டுகள் திரைத்துறையில் நிலைத்து நின்று நடித்து வருவதை பாராட்டினார். பல மாற்றங்களை மீறி நயன்தாரா நடித்து வருவது சிறப்பு என்றார்.

பிறகு நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார், சீதையாகவும் நடிக்கிறார் என்று பேசினார். “முன்பெல்லாம் கடவுள் வேடம் என்றால் கே.ஆர்.விஜயாவைத்தான் தேடுவார்கள். பார்த்தவுடன் கும்பிடத் தோன்றும். இப்போது யார் வேண்டுமானாலும் கடவுளாக நடிக்கிறார்கள். பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கிறார்கள், பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கிறார்கள்.”என்று சொன்னார்.

இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் பெயரில் ராதாரவியை கட்சியை விட்டு தற்காலிக நீக்கம் செய்வதாக அறிக்கை வந்தது. காரணம் பெண்களை தரக்குறைவான வகையில் பேசியது என்றது அறிக்கை.

இப்போது சமூக வலைத்தளங்களில் ஜெயலலிதா உள்ளிட்ட பெண்களை தரக்குறைவாக பேசிய வெற்றிகொண்டான், தீப்பொறி ஆறுமுகம் ஆகியோர் மீது வராத நடவடிக்கை, சமீபத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதாவை தரக்குறைவாக பேசிய ஈரோடு இறைவன் மீது வராத நடவடிக்கை நயன்தாராவை பேசிய ராதாரவி மீது மட்டும் ஏன் என்று கேட்டு திமுகவின் இரட்டை நிலைப்பாடு குறித்து விமர்சித்து வருகின்றனர்.

ராதாரவி கண்டனம் பற்றியும் நடவடிக்கை பற்றியும் கூறுகையில் “இதெல்லாம் நாலு நாள் கூத்து. அப்புறம் இதெல்லாம் எவனுக்கும்  ஞாபகம் இருக்காது. நான் அப்படி என்ன இல்லாதத சொல்லிட்டேன் தப்பா பேசிட்டேன் மன்னிப்பெல்லாம் கேட்க?” என்று கேட்டார்.

(Visited 39 times, 1 visits today)
0

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *