28-03-2019 அன்றைய நாட்குறிப்பு, நக்ஷத்திர பலன்கள்.

Related image                                                                              

இன்றைய பஞ்சாங்கக் குறிப்பு:

விளம்பி வருஷம் பங்குனி மாதம் 14ஆம் தேதி மார்ச் 28ஆம் தேதி வியாழக்கிழமை. அஷ்டமி திதி மறுநாள் அதிகாலை 2.48 வரை,  மூலம் நக்ஷத்திரம் வியாழன் மதியம் 2.19 வரை பிறகு பூராடம்.
ராகு காலம்: மதியம்  1.30   முதல் 3.00 வரை
எமகண்டம்: காலை  6.00   முதல் 7.30 வரை
நல்ல நேரம் : காலை: 10.30 – மதியம் 1.30 வரை
சூலம்: தெற்கு
ஒவ்வொரு நக்ஷத்திரத்துக்கான இன்றைய பலன்கள்:
அஸ்வதி:

மதியம் 2.19 வரை வாகனப் பயணங்களில் கவனம் தேவை. உடல்நிலையில் சிறு சிறு உபாதைகள் ஏற்படும். கடன் கொடுக்கவோ வாங்கவோ வேண்டாம். மறைமுக எதிர்ப்பு இருக்கும். மொத்தத்தில் சுமாரான நாள். 2.19க்கு மேல் முயற்சிகள் கைகூடும். புதிய ஒப்பந்தங்களால் லாபம் கிடைக்கும். பணவரவு இருக்கும். மேலதிகாரிகளின் பாராட்டு கிட்டும். வேண்டிய பணிமாற்றம், இடமாற்றம் கிடைக்கும்.
கணபதி வழிபாடு நன்மைகளை அதிகரிக்கும், நிம்மதி தரும்.

பரணி:

மதியம் 2.19 வரை முயற்சிகள் கைகூடும். புதிய ஒப்பந்தங்கள் லாபகரமாக அமையும். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற நற்செய்திகள் வரும். நண்பர்களின் உதவிகள் கிட்டும். 2.19க்கு மேல் அலுவலகப்பணிகளில் சுமை கூடும். யாருடனும் வாக்குவாதம் வேண்டாம். பணவரவில் சிக்கல் இருக்கும். பிறர் பிரச்சினைகளில் தலையிடவேண்டாம். தீர சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.
அம்பாள் வழிபாடு தீமைகளை விலக்கி நன்மைகளை அதிகரிக்கும்.

கார்த்திகை:

மதியம் 2.19 வரை எடுத்த முயற்சிகள் கைகூடும். வீடு, இடம், வாகனம் வாங்க வாய்ப்புகள் ஏற்படும். நண்பர்களால் உதவி கிட்டும். ஆடை அணிகலன்கள் வாங்கி மகிழ்வீர்கள். 2.19க்கு மேல் எடுத்த காரியம் கைகூடும். நோய்களின் தாக்கம் குறையும். எதிர்ப்புகள் விலகும். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் வரும். கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடு நீங்கி அந்நியோன்னியம் ஏற்படும்.
நன்மை அதிகரிக்க வணங்க வேண்டிய தெய்வம் சிவபெருமான்

ரோகிணி:

மதியம் 2.19 வரை உடல்நிலையில் கவனம் தேவை. யாருக்கும் வாக்குக் கொடுக்க வேண்டாம். பொதுப்பணிகளில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனமாக இருக்கவும். 2.19க்கு மேல் நீண்ட நாள் நண்பர்களால் உதவி கிடைக்கும். அதன் மூலம் மகனுக்கோ மகளுக்கோ சுபநிகழ்ச்சிகள் சம்பந்தமான நற்செய்தி வந்து நிம்மதி பெறுவீர்கள். நல்ல முடிவுகள் ஏற்படும் நாளாக இருக்கும். விரும்பிய பணிமாற்றம், இடமாற்றம் ஏற்படும்.
ஸ்ரீ அம்பாள் வழிபாடு தீமைகளை விலக்கி நன்மைகளை அதிகரிக்கும்.

மிருகசீர்ஷம்:

மதியம் 2.19 வரை முயற்சிகள் கைகூடும். புதிய ஒப்பந்தங்கள் லாபகரமாக அமையும். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற நற்செய்திகள் வரும். நண்பர்களின் உதவிகள் கிட்டும். 2.19க்கு மேல் மேல் அலுவலகப் பணிகளில் கவனம் தேவை. அவசியமற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். பணம் கொடுப்பதோ வாங்குவதோ வேண்டாம். காரியத் தடைகள் உண்டாகும். மறைமுக எதிர்ப்பு இருக்கும்.
ஸ்ரீ துர்க்கை வழிபாடு தீமைகளை விலக்கி நன்மைகளை அதிகரிக்கும்.

திருவாதிரை:

மதியம் 2.19 வரை விலை உயர்ந்த பொருட்களைக் கையாள்வதில் கவனம் தேவை. வாகனப் பயணங்களில் எச்சரிக்கை அவசியம். அலுவலகப் பணிகளில் முக்கியப் பொறுப்புகளை எச்சரிக்கையுடன் கையாளவும். 2.19க்கு மேல் எடுத்த முயற்சிகள் கைகூடும். நண்பர்கள், உறவினர்களிடையே மகிழ்ச்சி பொங்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பதவிகள் தேடிவரவும், சமூகப் பணி செய்வதன் மூலம் பாராட்டுப் பெறவும் வாய்ப்புள்ளது.

தீமை கட்டுப்பட்டு நன்மை பெருகிவர துர்க்கை வழிபாடு நலம் பயக்கும்.

புனர்பூசம்:

மதியம் 2.19 வரை முயற்சிகள் கைகூடும். புதிய ஒப்பந்தங்கள் லாபகரமாக அமையும். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்ற நற்செய்திகள் வரும். நண்பர்களின் உதவிகள் கிட்டும். 2.19க்கு மேல் அவசியமற்ற விஷயங்களில் தலையிட வேண்டாம். பேச்சில் கவனம் அவசியம். வாக்குக் கொடுப்பதோ கடன் கொடுப்பதோ வாங்குவதோ வேண்டாம்.
நன்மை அதிகரிக்க வணங்க வேண்டிய தெய்வம் தக்ஷிணாமூர்த்தி

பூசம்:

மதியம் 2.19 வரை சகோதர வகையில் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. யாருக்கும் ஆலோசனைகள் சொல்ல வேண்டாம். இயந்திரங்களில் பணியாற்றும் போது கவனம் அவசியம். 2.19க்கு மேல் எடுத்த முயற்சிகள் கைகூடும். திருமணத்துக்கு காத்திருப்போருக்கு நற்செய்தி வரும். குழந்தைக்காகக் காத்திருப்போருக்கு நல்ல செய்தி மகிழ்ச்சி தரும். நண்பர்களால் உதவி கிட்டும். ஆடை அணிகலன்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
ஆஞ்சநேயர் வழிபாடு மகத்தான நன்மை தரும்.

ஆயில்யம்:

மதியம் 2.19 வரை எடுத்த முயற்சிகள் கைகூடும். முக்கிய நபர்களைச் சந்தித்து வேலைகளை முடித்துக் கொள்வீர்கள். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் கைகூடும். குழந்தை பாக்கியம் கைகூடிவர வாய்ப்புள்ள நாளாக இருக்கிறது. புதிய வாகனம் வாங்கி மகிழ்வீர்கள். விரும்பிய பணிமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். 2.19க்கு மேல் உடல் நலனில் கவனம் தேவை. கூரிய பொருட்களைக் கையாள்வதில் மிகுந்த கவனம் தேவை. அலுவலகத்தில் உடன்பணியாற்றுவோர் அதிருப்திக்கு ஆளாக நேரிடலாம். பணிச்சுமை கூடும்.
பெருமாள் வழிபாடு பெருமிதம் தரும்.

மகம்:

மதியம் 2.19 வரை அலுவலகத்தில் நீண்ட நாள்பட்ட சிக்கலைத் தீர்த்து வைப்பீர்கள். மேலதிகாரிகள் உங்கள் செயலால் மகிழ்ச்சி அடைவார்கள். பிறருக்கு ஆலோசனைகள் சொல்லி அதன் மூலம் நன்மை நடந்து பாராட்டப்படுவீர்கள். இழுபறியாக இருந்த வேலை ஒன்று நல்லபடியாக முடியும். 2.19க்கு மேல் எடுத்த முயற்சிகள் கைகூடும். நண்பர்கள், உறவினர்களிடையே மகிழ்ச்சி பொங்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பதவிகள் தேடிவரவும், சமூகப் பணி செய்வதன் மூலம் பாராட்டுப் பெறவும் வாய்ப்புள்ளது.
கணபதி வழிபாடு நற்பலன்களை அதிகரித்து அருளும்.

பூரம்:

மதியம் 2.19 வரை முயற்சிகள் கைகூடும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் ஏற்பட்டு மகிழ்ச்சி பொங்கும். புதிய ஆடை, அணிகலன் சேர்க்கை ஏற்படும். வியாபரத்தில் லாபம் கிடைக்கும். பிறருக்கு ஆலோசனைகள் சொல்லி அதன் மூலம் நன்மை நடந்து பாராட்டப்படுவீர்கள். 2.19க்கு மேல் அலுவலகத்தில் நீண்ட நாள்பட்ட சிக்கலைத் தீர்த்து வைப்பீர்கள். மேலதிகாரிகள் உங்கள் செயலால் மகிழ்ச்சி அடைவார்கள். வெளி இடங்களில் பிரச்சனைகள் பெரிதாவது போல இருந்தாலும் பாதிப்பு இருக்காது. உங்கள் நற்பெயருக்கு களங்கம் வராது.
நன்மைகள் அதிகரித்து மன நிம்மதி பெருகிட அம்பாளை வழிபடுவது சிறப்பு.

உத்திரம்:

மதியம் 2.19 வரை பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். அலுவலகப்பணிகளில் சிறப்பாக செயல்பட்டு சக ஊழியர்கள், அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். விரும்பிய பணிமாற்றம், இடமாற்றம் ஏற்படும். 2.19க்கு மேல் காரியத் தடை, பேச்சுவார்த்தைகளில் இழுபறி, அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். நண்பர்கள் உறவினரிடம் பேசும் போது வார்த்தைகளில் கவனம் அவசியம்.
சிவ வழிபாடு நன்மைகளை அதிகரித்து நிம்மதி தரும்.

ஹஸ்தம்:

மதியம் 2.19 வரை பெரியோர்/முத்தோர் கோபத்துக்கு ஆளாகாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். வாக்கு வாதம் யாரிடமும் வேண்டாம். கடன் கொடுப்பது வாங்குவதைத் தவிர்க்கவும். 2.19க்கு மேல் வராக்கடன் வசூலாகும். வழக்கு விவகாரங்களில் வெற்றி/சாதகத் திருப்பம் ஏற்படும். அலுவலகத்தில் பணிகள் சிறப்பாகி மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் கிட்டும்.
அம்பாள் வழிபாடு நன்மைகளை அதிகரித்து நிம்மதி தரும்.

சித்திரை:

மதியம் 2.19 வரை பணவரவு இருக்கும். தொழிலில் வெற்றி, தன லாபம் இருக்கும். நல்ல செய்திகள் வந்து மனதை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். விரும்பிய பணிமாற்றம், இடமாற்றம் ஏற்படும். வழக்கு விவகாரங்களில் வெற்றி, சாதகமான திருப்பங்கள் கிடைக்கும். முக்கிய வேலைகளை காலை வேளையில் முடித்துக் கொள்வது சிறப்பு. 2.19க்கு மேல் காரியத் தடை, பேச்சுவார்த்தைகளில் இழுபறி, அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். பயணங்களில் கவனம் அவசியம்.
முருகனை வழிபட முத்தான நாளாக அமையும்.

ஸ்வாதி:

மதியம் 2.19 வரை மேல் காரியத் தடை, பேச்சுவார்த்தைகளில் இழுபறி, அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். கவனம் அவசியம். விஷபூச்சிக்களால் ஆபத்து ஏற்படும் வாய்ப்புள்ளதால் ஜாக்கிரதையாக இருக்கவும். 2.19க்கு மேல் ஊதிய உயர்வு, பதவி உயர்வு குறித்த நல்ல செய்திகள் வரும். நண்பர்களால் உதவிகிட்டும். இழுபறியில் இருந்த காரியங்கள் நிறைவேறி நற்பெயர் கிட்டும். உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
ஸ்ரீதுர்க்கை வழிபாடு தீமைகளை அகற்றி மன நிம்மதி தரும்.

விசாகம்:

மதியம் 2.19 வரை உடல் நலனில் கவனம் தேவை. சிறு காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொருட்களைக் கையாள்வதில் மிகுந்த கவனம் தேவை. அலுவலகத்தில் உடன்பணியாற்றுவோர் அதிருப்திக்கு ஆளாக நேரிடலாம். 2.19க்கு மேல் எடுத்த முயற்சிகள் கைகூடும். வீடு, இடம், வாகனம் வாங்க வாய்ப்புகள் ஏற்படும். நண்பர்களால் உதவி கிட்டும். பணவரவு ஏற்படும். வராக்கடன் வசூலாகும்.
சிக்கல்கள் நீங்கி நாள் சீராக அமைய சுப்பிரமணியர் வழிபாடு நல்லது.

கேட்டை:

மதியம் 2.19 வரை தொழிலில் வெற்றி, தன லாபம் இருக்கும். உடல் நிலையில் முன்னேற்றம் காண்பீர்கள். நல்ல செய்திகள் வந்து மனதை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். தொழில் நிமித்தமாகப் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வர். 2.19க்கு மேல் மேல் எடுத்த முயற்சிகள் கைகூடும். வீடு, இடம், வாகனம் வாங்க வாய்ப்புகள் ஏற்படும். நண்பர்களால் உதவி கிட்டும். பணவரவு ஏற்படும். வராக்கடன் வசூலாகும். காலை வேளையில் சற்றே இழுபறியில் இருந்த வேலைகள் மதியம் நல்ல முடிவுக்கு வந்து மகிழ்ச்சி தரும்.
ஆஞ்சநேயர் வழிபாடு மகத்தான நன்மை தரும்.

மூலம்:

மதியம் 2.19 வரை முயற்சிகள் கைகூடும். நண்பர்கள், உறவினர்களிடையே மகிழ்ச்சி பொங்கும். விருந்து உபசாரங்களில் கலந்து கொள்வீர்கள். புதிய ஒப்பந்தங்களால் லாபம் கிடைக்கும். புதிய ஆடை ஆபரணச் சேர்க்கை உண்டு. 2.19க்கு மேல் தேவையற்ற செலவுகள் பணத்தைக் கரைக்கும். புதிய முயற்சிகளை ஒத்திப்போடவும். வியாபாரப் பேச்சுவார்த்தைகளில் அதிக கவனம் தேவை. சமூகப் பணிகளில் எச்சரிக்கையுடன் இருக்கவும்.
சரபேஸ்வரர் வழிபாடு நன்மை தரும்.

பூராடம்:

மதியம் 2.19 வரை பணவரவு இருக்கும். ஏற்றுமதி – இறக்குமதி தொழிலில் வெற்றி, லாபம் ஆகியவை கைகூடும். நல்ல செய்திகள் வந்து மனதை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். விருந்து உபசாரங்களில் கலந்து கொள்வீர்கள். 2.19க்கு மேல் அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.ஆனால் நீண்ட நாள்பட்ட சிக்கலைத் தீர்த்து வைத்து மேலதிகாரிகள் பாராட்டைப் பெறுவீர்கள். வெளி இடங்களில் பிரச்சனைகள் பெரிதாவது போல இருந்தாலும் பாதிப்பு இருக்காது. உங்கள் நற்பெயருக்கு களங்கம் வராது.
அம்மன் வழிபாடு தீய பலன்களைக் கட்டுப்படுத்தவும் நன்மைகளை அதிகரிக்கவும் செய்யும்.

உத்திராடம்:

மதியம் 2.19 வரை பணவரவு இருக்கும். ஏற்றுமதி – இறக்குமதி தொழிலில் வெற்றி, லாபம் ஆகியவை கைகூடும். நல்ல செய்திகள் வந்து மனதை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். 2.19க்கு மேல் நோய்களின் கடுமை குறையும். வெளிவட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். நீண்டகால நண்பரைச் சந்தித்து மகிழ்வீர்கள். விருந்து உபசாரங்களில் கலந்து கொள்வீர்கள். புதிய ஒப்பந்தங்களால் லாபம் கிடைக்கும்.
சிவ வழிபாடு தீமைகள் விலகி நன்மை பெருக வகை செய்யும்.

திருவோணம்:

மதியம் 2.19 வரை பேச்சு வார்த்தைகளில் எச்சரிக்கை அவசியம். ஆயுதங்கள் கையாள்வதில் கவனம் தேவை. சிறு காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. உடலில் சிறுசிறு உபாதைகள் வந்து நீங்கும். 2.19க்கு மேல் போட்டித் தேர்வுகளில், நேர்முகத் தேர்வுகளில் வெற்றி கிட்டும். வேலை எதிர்பார்த்திருப்போருக்கு வெளிநாட்டு வேலை குறித்த நல்ல செய்தி வரும். மகனுக்கோ மகளுக்கோ சுபநிகழ்ச்சிகள் கைகூடி நிம்மதி பெறுவீர்கள். நல்ல முடிவுகள் ஏற்படும் நாளாக இருக்கும். விரும்பிய பணிமாற்றம், இடமாற்றம் ஏற்படும். பெண்களால் உதவி கிடைக்கும்.
அம்மன் வழிபாடு தீய பலன்களைக் கட்டுப்படுத்தவும் நன்மைகளை அதிகரிக்கவும் செய்யும்.

அவிட்டம்:

மதியம் 2.19 வரை போட்டித் தேர்வுகளில், நேர்முகத் தேர்வுகளில் வெற்றி கிட்டும். வேலை எதிர்பார்த்திருப்போருக்கு வெளிநாட்டு வேலை குறித்த நல்ல செய்தி வரும். மகனுக்கோ மகளுக்கோ சுபநிகழ்ச்சிகள் கைகூடி நிம்மதி பெறுவீர்கள். நல்ல முடிவுகள் ஏற்படும் நாளாக இருக்கும். விரும்பிய பணிமாற்றம், இடமாற்றம் ஏற்படும். 2.19க்கு மேல் பேச்சு வார்த்தைகளில் எச்சரிக்கை அவசியம். பயணங்களில் கவனமாக இருங்கள். உடலில் சிறுசிறு உபாதைகள் வந்து நீங்கும்.
முருகப் பெருமான் வழிபாடு நன்மை தரும்.

சதயம்:

மதியம் 2.19 வரை பயணங்களில் எச்சரிக்கை, விலையுயர்ந்த பொருட்களில் கவனம் ஆகியவை அவசியம். களவுபோக வாய்ப்புள்ளது. பணவரவில் சிக்கல்கள் உண்டாகும். 2.19க்கு மேல் முயற்சிகள் கைகூடும். நண்பர்கள், உறவினர்களிடையே மகிழ்ச்சி பொங்கும். சமூகத்தில் அந்தஸ்து கூடும். வெளிவட்டாரப் பழக்கங்கள் நன்மை தரும். புதிய ஒப்பந்தங்களால் லாபம் கிடைக்கும்.
துர்க்கை வழிபாடு நன்மை பயக்கும்.

பூரட்டாதி:

மதியம் 2.19 வரை போட்டித் தேர்வுகளில், நேர்முகத் தேர்வுகளில் வெற்றி கிட்டும். வேலை எதிர்பார்த்திருப்போருக்கு வெளிநாட்டு வேலை குறித்த நல்ல செய்தி வரும். மகனுக்கோ மகளுக்கோ சுபநிகழ்ச்சிகள் கைகூடி நிம்மதி பெறுவீர்கள். நல்ல முடிவுகள் ஏற்படும் நாளாக இருக்கும். விரும்பிய பணிமாற்றம், இடமாற்றம் ஏற்படும். 2.19க்கு மேல் பயணங்களில் எச்சரிக்கை, விலையுயர்ந்த பொருட்களில் கவனம் ஆகியவை அவசியம். வாக்குக் கொடுக்க வேண்டாம். அறிவுரை சொல்ல வேண்டாம். பேச்சில் எச்சரிக்கை அவசியம்.
தக்ஷிணாமூர்த்தியை வழிபட குறைகளை நீக்கி நன்மைகளை அருளும்.

உத்திரட்டாதி:

மதியம் 2.19க்கு காரியத் தடை, பேச்சுவார்த்தைகளில் இழுபறி, அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். கவனம் அவசியம். 2.19க்கு மேல் போட்டித் தேர்வுகளில், நேர்முகத் தேர்வுகளில் வெற்றி கிட்டும். வேலை எதிர்பார்த்திருப்போருக்கு வெளிநாட்டு வேலை குறித்த நல்ல செய்தி வரும். மகனுக்கோ மகளுக்கோ சுபநிகழ்ச்சிகள் கைகூடி நிம்மதி பெறுவீர்கள். நல்ல முடிவுகள் ஏற்படும் நாளாக இருக்கும். விரும்பிய பணிமாற்றம், இடமாற்றம் ஏற்படும். பணவரவு இருக்கும்.
ஆஞ்சநேயரை வழிபடுவது நன்மைகளை அதிகரிக்கும். மன நிம்மதி கிடைக்கும்.

ரேவதி:

மதியம் 2.19க்கு நண்பர்களால் நன்மை உண்டாகும். ஆடை அணிகலன்கள் வாங்கி மகிழ்வீர்கள். புதிய வாகனங்கள் வாங்குவீர்கள். 2.19க்கு மேல் பேச்சு வார்த்தைகளில் கவனம் தேவை. பணவரவில் சிக்கல்கள் உண்டாகும். புதிய முயற்சிகளை தள்ளிப்போடவும். முக்கியப் பணிகளை 2.19க்கு முன்னரே முடித்துக் கொள்வது நலம்.

பெருமாளை வழிபட தீமைகள் விலகி நன்மைகள் மேலோங்கும்.

ஸ்ரீ மாத்ரே நம: 

சுபம்

𝒮𝒜 𝑅𝒶𝓂𝒶𝓈𝓌𝒶𝓂𝓎

(Visited 74 times, 1 visits today)
2+

About The Author

You might be interested in

LEAVE YOUR COMMENT

Your email address will not be published. Required fields are marked *