வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக அணியில் பாமகவிற்கு திண்டுக்கல் தொகுதியை ஒதுக்கியுள்ளது அதிமுக. வலுவே இல்லாத தொகுதியை பாமகவின் கையில் கொடுத்துள்ளது அதிமுக. பாமக சார்பில் ஜோதி முத்து என்பவர் களம் இறக்கப்பட்டு உள்ளார். திமுக சார்பில் ப.வேலுச்சாமி களம் இறங்கியுள்ளார்.
பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகள் உள்ளடக்கியது திண்டுக்கல் மக்களவைத் தொகுதி. அரவக்குறிச்சியில் மட்டும் தேர்தல் நடக்கவில்லை.
பாமக மேற்கூறிய ஐந்து சட்டசபை தொகுதிகளிலும் மொத்தமாகவே 8000 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. முற்றிலுமாக அதிமுகவின் தயவை மட்டுமே நம்பி பாமக வேட்பாளர் களம் இறங்கியுள்ளார்.
திமுகவைப் பொறுத்தவரையில் பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர் ஆகிய தொகுதிகளில் பெருமளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. திண்டுக்கல் மற்றும் நிலக்கோட்டை ஆகிய இரு தொகுதிகளில் மட்டுமே அதிமுக வென்றது.
தேர்தலில் எந்த அணி வெற்றி பெரும் வாய்ப்பைக் கொண்டுள்ளது என்பதற்கான எனது தரப்பு விஷயங்களை இந்த லிங்கில் சென்று படிக்கலாம்.
2016 சட்டசபை தேர்தலில் அதிமுக அணி பெற்ற வாக்குகள் 5,19,000
2016 சட்டசபை தேர்தலில் திமுக அணி பெற்ற வாக்குகள் 6,09,000
திமுக அணியின் வெற்றி வாக்கு வித்தியாசம் 90,000 !!!
அதிமுக மற்றும் பாஜக ஆட்சிக்கு எதிரான மனநிலை, பலவீனமான பாமக, அமமுக பிரிக்கப் போகும் வாக்குகள் என பாமக இந்தத் தொகுதியில் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்படும். முக்குலத்தோர் வாக்குகள் அதிகமுள்ள தொகுதி என்பதால் பாமக இங்கு நிச்சயம் வெல்ல இயலாது.
திமுக உறுதியாக வெல்லும் தொகுதி வரிசையில் திண்டுக்கல் நிச்சயமாக உள்ளது என்பதே எனது கணிப்பு. தேர்தல் முடிவில் பார்க்கலாம்.